புதுச்சேரி அருகேயுள்ள விழுப்புரம் மாவட்ட பொம்மையார் பாளையத்தில் இரு வாலிபர்கள் ஆட்டுக்குட்டிகளை திருடும் போது கையும் களவுமாக பிடிபட்டனர். குடிப்பதற்கு பணம் இல்லாததால் ஆட்டுக்குட்டிகளை திருடிய 2 வாலிபர்களும் ஒப்புக்கொண்டனர்.
கருவடிக்குப்பம் பொரி தினேஷ் மற்றும் அவனது நண்பன் குமார் ஆகிய இருவரையும் பொது மக்கள் பிடித்தனர். மூதாட்டியும் பொது மக்களும் அவர்கள் இருவரையும் முட்டி போட வைத்து தர்ம அடி கொடுத்தனர். அப்போது மூதாட்டி,"தள்ளாத வயதிலும் தான் வேலை செய்து சம்பாதித்து சாப்பிடுவதாகவும் நல்ல ஆரோக்கியமான உடலை வைத்து கொண்டு திருடியா சாப்பிட வேண்டும்? என ஆவேசமாக திட்டினார்.
இதனையடுத்து ஆரோவில் காவல் நிலையத்திற்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு வந்து வாலிபர்களை பிடித்து சென்றனர். இவர்கள் ஏற்கனவே அப்பகுதியில் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் கஞ்சா விற்பதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.