இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. மற்ற ஆண்டுகளை விட கடந்தாண்டு இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை 40 விழுக்காட்டிற்கு மேல் அதிகரித்துள்ளது. குறிப்பாக கார்களை விட எலக்ட்ரிக் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன. இ-பைக்குகளின் விற்பனை அதிகரித்து வருவதால் இரு சக்கர வாகன தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய மாடல்களில் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை தாயரித்து அறிமுகம் செய்து வருகிறார்கள். 2022ஆம் ஆண்டு பல்வேறு புதிய மாடல் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வரிசையில் பிரபல எலக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனமான ஓலா இன்னும் 3 ஆண்டுகளுக்குள் 6 புதிய எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்பும் மாடல் மற்றும் வடிவமைப்பில் புதிய தாயரிப்புகள் இருக்கும் என ஓலா இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். எலக்ட்ரி்க் பைக் தயாரிப்பில் வருங்காலத்திற்கு ஏற்றார் போல புதிய தொழில்நுட்பங்களுடன் தங்களது தயாரிப்புகள் மிகவும் மேம்பட்ட வகையில் இருப்பதற்கான முயற்சிகளில் தங்களது தொழில்நுட்பக் குழு ஈடுபட்டுள்ளதாக அகர்வால் தெரிவித்துள்ளார். அதே போல் அடுத்த ஆண்டிற்குள் எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யவும் ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்குள் வாகனம் எல்லாம் எலக்ட்ரிக் மயமாக வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டு வரும் ஓலா நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் கடந்த ஆண்டு நல்ல விற்பனை அளவை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ஒன்றரை லட்சம் ஓலா பைக்குகள் விற்பனையாகியுள்ளது. அதே போல் வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஓடும் கார்களில் பெரும்பானவை எலக்ட்ரிக் கார்களாகிவிடும் என்பதால் எலக்ட்ரிக் கார் தயாரிப்பிலும் கவனம் செலுத்த உள்ளது ஓலா நிறுவனம். இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு திறனை 5 GWh( Gihawat hours) என அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், 2030 ஆம் ஆண்டிற்குள் இந்த உற்பத்தி திறனை 100 GWh( Gihawat hours) ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் பாவிஷ் அகர்வால் கூறியுள்ளார்.
இந்தியாவின் எலகட்ரிக் வாகன சந்தையில் தனக்கென தனி இடம் பிடிக்கும் முயற்சியில் ஓலா நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளது. வரும் காலத்தில் இந்தியா உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு மையமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை என்ற நம்பிக்கையையும் அகர்வால் முன்வைத்துள்ளார். அதற்கான முன்னோட்டமாக இந்தியாவில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன தயாரிப்பை தீவிரப்படுத்தியுள்ளது ஓலா இந்தியா நிறுவனம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ola