Home /News /live-updates /

உடல் எடையை குறைத்த வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் - உலக நாடுகள் கவனம்!

உடல் எடையை குறைத்த வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் - உலக நாடுகள் கவனம்!

Kim Jong Un

Kim Jong Un

சில வருடங்களுக்கு முன்னர் வட கொரிய அதிபரான கிம், சுமார் 170 சென்டிமீட்டர் (5 அடி, 8 அங்குலம்) உயரம் மற்றும் 140 கிலோ (308 பவுண்டுகள்) எடையுடன் இருந்தார்.

வடகொரிய தேசிய தின விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் உற்சாகமாகக் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் அவர் மிகவும் உடல் எடை குறைந்து காணப்படுவதால் உலக நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் உடல்நிலை குறித்து கடந்த சில மாதங்களாகவே பல்வேறு தகவல்களும் வெளியாகின. சமீபத்தில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும், அவருக்கு பதிலாக வேறு ஒருவர் இருப்பதாகவும் கூட வதந்திகள் பரவின. ஆனால், உடல்நிலைக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கிம் ஜாங் உன் அதிலிருந்து மீண்டு வந்துள்ளதாக வடகொரிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர். .

இந்நிலையில், வடகொரியா நாட்டின் 73வது ஆண்டு விழா செப் 9ம் தேதி நடைபெற்றது. அதில் நள்ளிரவு நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டார். அவரை பள்ளி குழந்தைகள் அழைத்து வர புன்னகையுடன் மக்களை பார்த்து கையசைத்தவாறு கிம் ஜாங் உன் வருகை தந்தார். இந்தப் புகைப்படம் உலக நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது. மேலும் அந்த நிகழ்ச்சியில் பெங்கேற்றவர்கள் அவருக்கு பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் நிகழ்ச்சி முழுவதும் அணிவகுத்து வந்தவர்களை பாராட்டிய கிம் ஜாங் உன், அங்கிருந்த மூத்த அதிகாரிகளுடன் அரட்டை அடித்தார். இதனிடையே கிம் ஜாங்கின் எடை இழப்பு கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது, சில வருடங்களுக்கு முன்னர் வட கொரிய அதிபரான கிம், சுமார் 170 சென்டிமீட்டர் (5 அடி, 8 அங்குலம்) உயரம் மற்றும் 140 கிலோ (308 பவுண்டுகள்) எடையுடன் இருந்தார். ஆனால் தற்போது 10-20 கிலோ (22-44 பவுண்டுகள்) வரை எடை குறைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

Also Read:  11 ஆண்டுகளாக சம்பளம் பெற்று வரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் – ஆர்.டி.ஐ தகவலில் அம்பலம்!

கிம்மின் உடல் எடை குறைந்திருப்பது உடல்நலப் பிரச்சினைகளைக் காட்டிலும், அவரது வழக்கமான பொதுச் செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு உடல் நலத்தை மேம்படுத்துவதன் முயற்சியின் விளைவாகும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும் கிம் ஜாங்கின் தந்தை மற்றும் தாத்தா இருவருமே இதய பிரச்சினைகளால் தான் உயிரிழந்தனர் என்பதால், அவரது எடை இருதய நோய்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்பதால் கூட உடல் எடையை குறைத்திருக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் மற்ற உலக நாடுகள் பலவும் கிம் ஜாங் உன்-ன் உடல்நலத்தில் ஏன் அக்கறை காட்டுகின்றன? என்ற கேள்வி பரவலாக எழுகிறது. குறிப்பாக சியோல், வாஷிங்டன், டோக்கியோ மற்றும் பிற உலக தலைநகரங்களில் கிம்மின் உடல்நிலை முக்கியமானது, ஏனென்றால் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகளை குறிவைத்து முன்னேறும் அணுசக்தி திட்டத்தை செயல்படுத்தும் அதிபராக கிம் ஜாங் உன் இருப்பதே காரணமாகும்.

Also Read:  769 நாள் லீவு போட்டுவிட்டு ஒரே நேரத்தில் இரட்டை சம்பளம் வாங்கிய கில்லாடி கணக்கு வாத்தியார் – ஏமாற்றியது எப்படி?

மேலும் வட கொரியாவில் என்ன நடக்கிறது என்பது பெரும்பாலான நாடுகளில் வெளிப்படையாக தெரிவதில்லை. கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு உத்தரவை வட கொரியா அரசு விதித்தது. இதனால், உணவுப் பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் தனிமைப்படுத்துதலில் தளர்வுகள் ஏதும் வர வாய்ப்பில்லை என்று கிம் கெடுபிடி காட்டி வருகிறார்.

இதனிடையே ஆகஸ்ட் மாதம் மற்றும் ஜூலை 24 முதல் ஜூலை 27 வரை பல ராணுவ நிகழ்வுகளின் போது அவரது தலையின் பின்புறத்தில் ஒரு கட்டுடன் கிம் ஜாங் உன் தோன்றினார் மற்றும் ஜூலை 27 முதல் ஜூலை 29 வரை போர் வீரர்கள் மாநாடு மற்றும் தொடர்புடைய நிகழ்ச்சிகளிலும் காணப்பட்டார். அவரது தலையின் பின்புறத்தில் காயம் இருந்தது மட்டுமின்றி அவரது தலையில் அடர் பச்சை நிற காயங்கள் காணப்படுவதாகவும் NK செய்திகள் தெரிவிக்கின்றன.

Also Read:  லெஸ்பியன் உறவில் ஈடுபட்டதாக பள்ளியில் மாணவிகளை அடித்து அவமதித்த ஆசிரியை!

அவரது தலையின் பின்புற வலது பக்கத்தில் காணப்பட்ட அடர் பச்சை காயங்கள் குறித்த தகவல்கள் தற்போது வரை தெரியவில்லை. அதே நேரத்தில் கிம் ஜாங் உன்னின் தலையில்இருந்த அந்த காயங்கள்
ஜூன் 29 அன்று நடந்த பொலிட்பீரோ கூட்டம் மற்றும் ஜூலை 11 அன்று இசைக்கலைஞர்களுடன் தோன்றிய புகைப்படங்களிலோ காணப்படவில்லை என்றும் NK செய்திகள் விவரித்துள்ளன.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் கிம்மின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது, அதற்கேற்ப ஏப்ரல் 15ம் தேதி நடைபெற்ற மாநில நிறுவனர் கிம் இல் சுங்கின் பிறந்தநாள் விழாவிலும் கிம் பங்கேற்கவில்லை. பின்னர் மே மாத தொடக்கத்தில் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் தோன்றியதன் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Also Read:   புயலைக் கிளப்பிய பாதிரியாரின் ‘லவ் ஜிகாத்’ பேச்சு!

இந்தநிலையில் தற்போது அவரது உடல் எடை குறைந்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவரது கடுமையான எடை இழப்பு அரசியல் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறைக்காக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் கிம் தன்னை ஒரு இளம் தலைவராகக் காட்டிக்கொள்வதற்காக கூட உடல் எடையை குறைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published:

Tags: Kim jong un, North korea

அடுத்த செய்தி