Tamil News Live: பிரக்ஞானன்ந்தா-விற்கு அர்ஜுனா விருது

Weather & Rain News Updates Live: தமிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை அப்டேட் மற்றும் உலக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கு அறியலாம்

 • News18 Tamil
 • | November 14, 2022, 20:16 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 24 DAYS AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  19:49 (IST)

  பிரக்ஞானன்ந்தா-விற்கு அர்ஜுனா விருது

  தமிழக செஸ் வீரர் பிரக்ஞானன்ந்தா-விற்கு, அர்ஜுனா விருதும், டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
  25 பேருக்கு அர்ஜுனா விருதும், 7 பேருக்கு துரோணாச்சாரியார் விருதும் வழங்கப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்கான விருதை குடியரசு தலைவர் 30ஆம் தேதி வழங்குகிறார். 

  18:29 (IST)

  சீர்காழியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

  கனமழை காரணமாக சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (நவம்பர் 15) ஆம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு. 

  13:17 (IST)

  “பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் சந்தித்தது திருப்திகரமாக இருந்தது” - ஓபிஎஸ

  பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல் முறையீடு செய்ய வேண்டும்.

  பிரதமர் மோடியை மதுரை விமான நிலையத்தில் சந்தித்த போது உண்மையில் நடந்தது என்ன என்பது என்னுடன் இருந்த எம்.எல்.ஏ ஐயப்பனுக்கு தெரியும். பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் சந்தித்தது திருப்திகரமாக இருந்தது.

  - மதுரை விமான நிலையத்தில் ஓ.பி.எஸ் பேட்டி

  11:0 (IST)

  கனமழை பாதிப்பு: சீர்காழியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு!

  சீர்காழியை அடுத்த பச்சைபெருமாள் நல்லூரில் கனமழை பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பேசினார். அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

  10:17 (IST)

  சென்னையில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மழை!

  தமிழ்நாட்டில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.

  - வானிலை ஆய்வு மையம் தகவல்

  9:13 (IST)

  கடலூர் மாவட்டம் கீழ்பூவாணி குப்பத்தில் முதலமைச்சர் ஆய்வு

  கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் மழை பாதிப்பு விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

  7:10 (IST)

  சிக்னல் கோளாறு: எழுப்பூர் வரும் ரயில்கள் தாமதம்!

  இன்று (14.11.2022) விழுப்புரம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் நோக்கி வரும் அனைத்து ரயில்களும் 2 மணி நேரம் காலதாமதமாக வரும்.

  - செங்கல்பட்டு இருப்பு பாதை காவல்நிலையம்

  7:0 (IST)

  செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

  செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக, பள்ளிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் இன்று (14/11/2022) திங்கட்கிழமை,

  கீழ் கண்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது,

  1. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மானாம்பதி (திருப்போருர் ஒன்றியம்)

  2.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வடகால் (காட்டாங்கொளத்தூர் ஒன்றியம்,

  3. அரசு மேல் நிலைப்பள்ளி அனகாபுத்துர் ( புனித தோமையார் மலை ஒன்றியம்)

  4. அரசு உயர் நிலைப்பள்ளி நன்மங்கலம் (புனித தோமையார் மலை ஒன்றியம்

  5. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நன்மங்கலம் (புனித தோமையார் மலை ஒன்றியம்