Tamil News Live: காஞ்சிபுரம் குன்றத்தூர் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை!

Weather & Rain News Updates Live: தமிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை அப்டேட் மற்றும் உலக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கு அறியலாம்

  • News18 Tamil
  • | November 13, 2022, 21:57 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    21:57 (IST)

    காஞ்சிபுரம் குன்றத்தூர் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை

    திங்கட்கிழமை (14.11.2022) மழையின் காரணமாக குன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் (மாங்காடு உட்பட) உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

    19:14 (IST)

    கனமழை: மயிலாடுதுறை பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

    மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் தேங்கி நிற்கும் மழை நீர் பம்ப்செட் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை 14/11/2022 ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    - மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா அறிவிப்பு

    11:52 (IST)

    இன்று இரவு சாலை மார்க்கமாக சிதம்பரம் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை சீர்காழி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார்.

    11:18 (IST)

    திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக 25 வீடுகள் சேதம் 10 கால் நடைகள் உயிரிழப்பு. 

    தென்மேற்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை என்பது பெய்து வந்தது. இதன் காரணமாக 23 கூரை வீடுகள் மற்றும் இரண்டு ஒட்டு வீடுகள் சேதம் அடைந்துள்ளன எனவும், எட்டு மாடுகள் மற்றும் இரண்டு ஆடுகள் என்ன மொத்தம் பத்து கால்நடைகள் உயிரிழந்துள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல்.

    10:23 (IST)

    சென்னையில் 8 விமானங்கள் ரத்து

    மழை காரணமாக சென்னையிலிருந்து அதிகாலை 4.55 மணிக்கு ஐதராபாத் செல்ல வேண்டிய விமானம், காலை 6.15 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய விமானம், பகல்1.10 மணிக்கு கர்னூல் விமானம், மாலை 5.10 மணிக்கு மதுரைக்கு செல்லும் விமானம் ஆகிய 4 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது.

    அதேபோல், அதிகாலை மும்பையில் இருந்து வர வேண்டிய விமானம், காலை 9.30 மணிக்கு மதுரையில் இருந்து வர வேண்டிய விமானம், மாலை 4.20 மணிக்கு கர்னூலில் இருந்து வர வேண்டிய விமானம், இரவு 8:30 மணிக்கு மதுரையில் வர வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

    9:11 (IST)

    தமிழகத்தில் நாளை முதல் மழை குறையும் 

    வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி , குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்த நிலையில் தற்போது வட உள் தமிழகம் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகள் மற்றும் கேரள கடற்கரை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்ச்சியாக நிலை கொண்டுள்ளது.

    இதன் காரணமாக நாளை முதல் படிப்படியாக தமிழகத்தில் மழையின் தீவிரம் குறைந்து வரும் என வானிலை ஆய்வு மையம் தகவல். 

    7:46 (IST)

    வீராணத்தில் 8000 கன அடி நீர் வெளியேற்றம் 10000க்கும் மேற்பட்ட ஹெக்டர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது

    7:11 (IST)

    10 மாவட்டங்களில் மிதமான மழை - வானிலை ஆய்வு மையம் 

    திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர் மற்றும் ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    6:55 (IST)

    சென்னையில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு பெய்யும் கனமழை

    சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை விட்டு விட்டு பெய்துவருகிறது. 

    6:35 (IST)

    வாசகர்களே!
    நியூஸ்18 தமிழ் சார்பில் இனிய வணக்கம்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 13. 
    இன்றைய நாளில் நிகழும் முக்கியச்செய்திகளை இந்த இணைப்பில் உடனுக்குடன் அறியலாம்.