Tamil News Live: இனி குடும்பத்தலைவியாக வாழப்போகிறேன் - நளினி பேட்டி

Weather & Rain News Updates Live: தமிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை அப்டேட் மற்றும் உலக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கு அறியலாம்

  • News18 Tamil
  • | November 12, 2022, 18:37 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 25 DAYS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    20:4 (IST)

    விடுதலை செய்யப்பட்டார் ரவிச்சந்திரன் 

    ராஜீவ் காந்தி கொலை வழக்கின் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலையானார்!

    18:57 (IST)

    5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    தேனி மாவட்டம் வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றம். இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் என 5 மாவட்டங்களில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    18:36 (IST)

    இனி குடும்பத்தலைவியாக வாழப்போகிறேன் - நளினி பேட்டி

    32 ஆண்டுகளாக எங்களை மறக்காமல் இருந்த தமிழக மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. நான் குடும்பத்தலைவியாக வாழ போகிறேன் குழந்தை கணவர் இவர்களுக்கானது என்னுடைய வாழ்க்கை. விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..


    17:20 (IST)

    புழல் சிறையில் இருந்து ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் விடுதலை


    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய இருவர் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும்  பேரறிவாளன் வரவேற்றார். இருவரையும் காவல்துறையினர் தங்களது வாகனத்தில் திருச்சி இலங்கை தமிழர்கள் முகாமிற்கு அழைத்து செல்கின்றனர்.

    இவர்கள் இருவரையும் காவல்துறையினர் தங்களது வாகனத்தில் திருச்சி இலங்கை தமிழர்கள் சிறப்பு முகாமிற்கு அழைத்து செல்ல உள்ளனர்


    16:49 (IST)

    நளினி விடுதலை செய்யப்பட்டார்

    உச்சநீதிமன்ற உத்தரவுபடி நளினி வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். 

    16:29 (IST)

    ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை ஆனவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்படுவர் 

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோர் விடுதலை ஆனதை தொடர்ந்து, சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூன்று பேரும், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட உள்ளனர்.

    16:8 (IST)

    தமிழகத்தில் அரசியல் தலைவருக்கான வெற்றிடம் உள்ளது.
    அதை பாஜக நிரப்ப வேண்டும் என சென்னையில் கட்சி நிர்வாகிகளிடம் 
    உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு


    15:49 (IST)

    பாஜகவினர் கடுமையாக உழைத்தால் அடுத்த 5ஆண்டில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம் 

    பாஜக அடிப்படை உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க உழைக்க வேண்டும் என்றும், பாஜக நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் பாஜகவினர் கடுமையாக உழைத்தால் அடுத்த 5ஆண்டில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என பாஜக தலைமை அலுவலக கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு

    14:23 (IST)

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் ஓபிஎஸ் 

    பிரதமரையும் மத்திய உள்துறை அமைச்சரையும் சந்தித்தது மகிழ்ச்சிகரமான திருப்திகரமாக சந்திப்பாக இருந்தது - ஓ பன்னீர்செல்வம் பேட்டி


    12:54 (IST)

    செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று 1000 கன அடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

    இன்று (12-11-22) மாலை 3 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்படுகிறது கரையோர உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.