இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு: கருந்துளை குறித்த ஆய்வுக்காக மூன்று பேருக்கு பகிர்ந்தளிப்பு

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு: கருந்துளை குறித்த ஆய்வுக்காக மூன்று பேருக்கு பகிர்ந்தளிப்பு

இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவர்கள்

2020-ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 • Share this:
  மருத்துவம், இயற்பியல், இலக்கியம், அமைதி உள்ளிட்ட பிரிவுகளில் ஆண்டு தோறும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுவருகிறது. 2020-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்ட் ஜென்செல், அண்ட்ரியா கெஸ் ஆகிய மூவருக்கும் இயற்பியலுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. கருந்துளை குறித்த ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  அதில், நோபல் பரிசின் ஒரு பாதி ரோஜெர் பென்ரோஸுக்கும், மற்றொரு பாதி ரெயின்ஹார்ட் ஜென்சில் மற்றும் அன்ட்ரியா கெஸுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Karthick S
  First published: