முகப்பு /செய்தி /Breaking and Live Updates / கணவன்- மனைவி ஐடி துறையில் இரவு நேரப்பணி... இதனால் கருத்தரிப்பதில் தாமதமாகுமா..?

கணவன்- மனைவி ஐடி துறையில் இரவு நேரப்பணி... இதனால் கருத்தரிப்பதில் தாமதமாகுமா..?

Default Image

Default Image

பெண் குயின் கார்னர் 47 : கண்ணில் விழும் ஒளியை வைத்து நம் உடலுக்கு தூங்குவதற்கு அல்லது விழித்திருப்பதற்கு கட்டளையிடும். இரவு நேர பணி புரிபவருக்கு, மெலடோனின் ஹார்மோன் சுரப்பு பாதிக்கப்படுவதால் மாதவிடாய் மற்றும் கருத்தரிப்பதில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

மேலும் படிக்கவும் ...
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரதியும் ரவியும் மென்பொருள் துறையில் பணிபுரியும் தம்பதியர். 30 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். திருமணமாகி ஒரு வருடம் முடிந்து விட்ட நிலையில் ,இரு குடும்பத்தினரும் விரைவில் குழந்தை வேண்டுமென்று கேட்க ஆரம்பித்து விட்டனர். அதனால், இருவரும் ஆலோசனைக்காக வந்திருந்தனர். ஏராளமான கேள்விகள் . அவற்றில் இரண்டாவது கேள்வியை நாம் பார்ப்போம்.

இருவருமே அமெரிக்க நிறுவனத்திற்காக பணிபுரிவதால் , வேலை நேரம் மாலை 8 மணியிலிருந்து ஆரம்பித்து அதிகாலை 4 மணி வரை.  தினமும் இரவு நேர பணி என்பதால் பகலில் தூங்கி விடுகிறோம் . இது போன்ற ஒரு வாழ்க்கை மாற்றம் எங்கள், குழந்தை பெறக்கூடிய வாய்ப்புகளை பாதிக்குமா?

இரவு நேர பணி எந்தவிதமான பாதிப்புகளை மனித உடலில் ஏற்படுத்துகிறது என்பது குறித்து ஏராளமான ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. எல்லா ஆராய்ச்சிகளின் முடிவுகளும் தெரிவிப்பது என்னவென்றால் மனித உடலில் உள்ள 'சர்க்கேடியன்' ரிதம் அல்லது பயோலாஜிக்கல் கிளார்க் அல்லது நமது உடல் இயங்கியல் கடிகாரம் கட்டாயமாக இந்த இரவு நேர பணியால் குழப்பமடைகிறது. நமது உடலில் இரண்டு விதமான உறுப்புகள் உள்ளன ஒரு சில உறுப்புகள் நம்முடைய கட்டுப்பாட்டில் இயங்குகின்றன . முக்கியமான உள் உறுப்புகள் இருதயம் நுரையீரல் போன்றவை மூளையினுடைய கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. அவை நாம் என்ன செய்து கொண்டு இருந்தாலும் ,தன்னுடைய வேலையை செய்து கொண்டிருக்கிறன.

நம் உடல் கடிகாரத்தின் படி இரவு 11 மணியிலிருந்து காலை மூன்று மணி வரை உள்ள நேரம் ஓய்வுக்கான நேரம் ஆகும். அந்த நேரத்தில் உடலினுடைய முக்கியமாக ஜீரண உறுப்புகள் ஓய்வு எடுத்துக் கொள்கின்றன. இரவு நேர பணி என்பது மூளைக்கு அதிகமாக கொடுக்கப்படும் வேலை.

ஜங்க் ஃபுட் சாப்பிட்டால் குழந்தையின்மை ஏற்படுமா..? மருத்துவர் விளக்கம்

மற்றொன்று அந்த நேரத்தில் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பது ஜீரண உறுப்புகளை ஓய்வு எடுக்க விடாமல் செய்கிறது. இதனால் உடலில் ஏற்படும் மொத்த மாற்றங்கள் பெண்களுக்கு குறிப்பாக ஹார்மோன் பிரச்சனைகளை ஏற்படுத்தி மாதவிடாய் ஒழுங்கின்மை மற்றும் கருத்தரித்தலில் தாமதம் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. ஆண்களுக்கும் விந்து எண்ணிக்கை பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன .

என்னதான் பகல் நேரத்தில் தூங்கினாலும் இரவு நேர ஓய்வு போன்று உள்ளுறுப்புகளால் முழுமையாக ஓய்வெடுக்க முடிவதில்லை.

பிட்யூட்டரி சுரப்பியை நாம் அனைவரும் அறிவோம். அது ராஜ சுரப்பி என்றும் அழைக்கப்படுகிறது. அதனுடைய கட்டுப்பாட்டில் தான் பல்வேறு முக்கியமான ஹார்மோன்களுடைய சுரப்பு இருக்கிறது. அதுபோன்ற மற்றொரு சுரப்பி பிணியல் சுரப்பி ஆகும். அதுவும் பிட்யூட்டரி அருகிலேயே இருக்கிறது. மெலடோனின் என்ற முக்கிய ஹார்மோனை சுரக்கிறது. அது எல்லா ஹார்மோன்களுடைய ஒருங்கிணைப்பிற்கும் தூங்குவதற்கும் முக்கியமானதாகும்.

மாதவிடாய் சமயத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா..? இந்த சமயத்தில் குழந்தை நிற்காதா..?

கண்ணில் விழும் ஒளியை வைத்து நம் உடலுக்கு தூங்குவதற்கு அல்லது விழித்திருப்பதற்கு கட்டளையிடும். இரவு நேர பணி புரிபவருக்கு, மெலடோனின் ஹார்மோன் சுரப்பு பாதிக்கப்படுவதால் மாதவிடாய் மற்றும் கருத்தரிப்பதில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இது இரவு நேர பணியில் இருப்பவர்களுக்கு மட்டும் இல்லை. இரவு வெகு நேரம் விழித்திருந்து கைபேசி லேப்டாப் போன்றவற்றில் விளையாடிக் கொண்டிருப்பவர்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

என் ஆலோசனை:

ரதிக்கும் ரவிக்கும் , அவர்களுடைய இரவு நேர பணியும் கருத்தரிப்பது தாமதமாக ஒரு காரணமாக இருக்கலாம் . எனவே இருவரும் பணியை இரவு 12 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் அல்லது இருவரும் பகல் நேர பணிக்கு, ஒன்று, இரண்டு வருடங்கள் மாறி கொள்வது, சரியாக இருக்கும் என்று கூறினேன்.

சில அடிப்படை பரிசோதனைகள் செய்து இருவருக்கும் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டேன். குழந்தைக்கு திட்டமிடுபவர்கள் அனைவருமே எடுக்க வேண்டிய போலிக் ஆசிட் மற்றும் விட்டமின் டி3 மாத்திரைகளை பரிந்துரைத்தேன்.

தினமும் உடலுறவு கொண்டால் கரு நின்றுவிடுமா..? மருத்துவர் விளக்கம்...

இருவருமே நான் சொல்வதை புரிந்து கொண்டனர். இருந்தும் அவர்களுக்கு சூழ்நிலை காரணமாக மாறுதல் கிடைப்பதற்கு ஆறு மாதங்களானது.

விரைவில் வந்து சந்திப்பதாக இருவருமே செய்தி அனுப்பி இருந்தார்கள்.

மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

First published: