பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் 14 பேர் கைது - தமிழகம் அழைத்து வந்து விசாரணை

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் 14 பேர் கைது - தமிழகம் அழைத்து வந்து விசாரணை
கோப்புப்படம்
  • Share this:
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியது தொடர்பான புகாரில், டெல்லியில் 14 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு சிலர் நிதி திரட்டுவதாக கிடைத்த தகவலின் பேரில், சென்னை, கோவை, நாகை ஆகிய இடங்களில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தினர்.

பின்னர், நாகையைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியது தொடர்பான புகாரில், டெல்லியில் வைத்து 14 பேரை கைது செய்துள்ளனர்.


சென்னை, நாகையில் நடத்தப்பட்ட சோதனை அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், 14 பேரையும் விமானம் மூலம் இன்றே தமிழகம் அழைத்து வந்து விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அவர்கள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

First published: July 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading