ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

திமுக, காங்கிரஸ் தவிர எல்லாரும் எங்க கூட்டணிக்கு வரணும் - அண்ணாமலை அழைப்பு!

திமுக, காங்கிரஸ் தவிர எல்லாரும் எங்க கூட்டணிக்கு வரணும் - அண்ணாமலை அழைப்பு!

அண்ணாமலை

அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணல் வழங்கியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Chennai [Madras]

  அதிமுக, திமுக என்றில்லாமல், மூவரும் பங்காளி சண்டை போடலாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அதில், பாஜக கூட்டணியில் யார், யார் இருக்கலாம் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், திமுக, காங்கிரஸ் தவிர எல்லாரும் எங்க பக்கம்தான் வரணும் என்று தெரிவித்துள்ளார்.

  அடுத்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல், அதனால் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

  தொடர்ந்து விசிக, மதிமுக கூட கூட்டணியில் இணைந்தால் சரியா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், சாதியில்லா சமூகத்தை திருமாவளவன் உருவாக்க வேண்டும். அப்படி மாறினால் அவரும் எங்கள் கூட்டணியில் இணைய சரியானவரே என்று கூறியுள்ளார்.

  தொடர்ந்து அதிமுக பிரச்சனையை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக பிரச்சனை உட்கட்சி பிரச்சனை, அதில் பாஜக தலையிட முடியாது என கூறினார்.

  மேலும், தமிழ்நாட்டில் ஏன் இன்னும் பாஜக ஒரு பெரிய இடத்திற்கு வரவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வளவு நாட்களும் அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா, இப்படி பெரிய ஆளுமைகள் இருந்ததால், எதுவும் செய்யமுடியவில்லை. இவர்களை எதிர்த்து யாராலும் ஆட்சி செய்யவே முடியாது என்று இருக்கும் சூழலில் பாஜக மட்டும் எப்படி மேலே வரமுடியும். அதனால்தான் வரமுடியவில்லை. ஆனால் தற்போது மக்களோடு ஒன்றிணையும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் திமுக vs அதிமுக, மட்டும்தான் என இருக்கும் நிலை பாஜக Vs என்று வருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நாங்களும் பங்காளிதான், மூவரும் ஒன்றாக பங்காளி சண்டை போடலாம் என கூறினார்.

  அதிமுக கூட்டணியா, பாஜக கூட்டணியா எது பெரிய கட்சி என்ற கேள்விக்கு, அதிமுகதான் பெரிய கட்சி, கருத்தியலில் திமுகவுக்கும் தங்களுக்கும் போட்டி வருகிறது. ஆனால், கட்சியை பொறுத்தவரை அதிமுகவே பெரிய கட்சி என தெரிவித்துள்ளார்.

  அடுத்த தேர்தலில் நீங்கள் களமிறங்குவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் நிற்க தனக்கு விருப்பமில்லை என்றும், 2026ஆம் ஆண்டு பாஜகவை தமிழகத்தில் கொண்டு வருவதுதான் எனது இலக்கு. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

  இப்படி ஒரு சூழ்நிலையில் 2026க்கும் எப்படி பாஜக தமிழகத்தில் வரும் என்ற கேள்விக்கு நம்பிக்கைதான் எல்லாம், மக்கள் நம்பினால் ஒரே இரவில் அனைத்தும் மாறிவிடும் என கூறினார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Annamalai, BJP, Chennai, News18 Tamil Nadu