முகப்பு /செய்தி /Breaking & Live Updates / 25 லட்சம் பேரில் ஒருவரை தாக்கும் சிஸ்டமிக் ஸ்களிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் சிறுமி...

25 லட்சம் பேரில் ஒருவரை தாக்கும் சிஸ்டமிக் ஸ்களிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் சிறுமி...

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி..

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி..

Systemic-Sclerosis : சினிமாவில் வருவது போல 25 லட்சம் பேரில் ஒருவரை தாக்கும் சிஸ்டமிக் ஸ்களிரோசிஸ் நோய் தாக்குதல் காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டு கல்வியை பாதியில் நிறுத்தி உயிருக்கு போராடும் சிறுமியின் பெற்றோர் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் சிகிச்சைக்கான உதவி கேட்டு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லும் வழியில் இருக்கும் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் அன்னக்கொடி, அரசு போக்குவரத்து தொழிலாளி. அவரது மனைவி பாண்டீஸ்வரி. இவர்களுக்கு செந்தூர் என்ற மகனும் ஜமுனா என்ற மகளும் உள்ளனர். ஜமுனாவுக்கு தற்போது 17 வயது ஆகிறது. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது 2014 ஆம் ஆண்டு ஜமுனாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அவரது இதய துடிப்பு குறைவானது.

இதன் காரணமாக அவ்வப்போது ஜமுனா மூர்ச்சையாகி விழுந்து விடுவார். பதறிப்போன பெற்றோர் அன்னக்கொடியும், பாண்டீஸ்வரியும் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் தங்களின் மகளை அனுமதித்து பரிசோதித்துப் பார்த்தபோது. ஜமுனாவுக்கு சிஸ்டமிக் ஸ்களிரோசிஸ் என்ற புது வகையான நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 25 லட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய  ஆபத்தான நோய் இது.

சிஸ்டமிக் ஸ்களிரோசிஸ் என்பது தன்னுடல் தாக்க கோளாறு ஆகும். உடலில் உள்ள இணைப்பு திசுக்களில் வித்தியாசமான வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இணைப்பு திசு உடல் உறுப்புகள் தசைகளுக்கு வலிமையையும்,  வடிவத்தையும் கொடுக்கிறது. கோலஜன் உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக தோலின் அமைப்பு மாறுபடுகிறது. வீக்கம், வலி ஏற்படுகிறது. இந்த நோய் தாக்குதல் காணமாக இதயம்,  ரத்தக்குழாய், செரிமான அமைப்பு,  நுரையீரல்,  சிறுநீரகம். பாதிக்கப்படலாம். 

நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் தமணியில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. குறுகிய தமணிகளால் இதயம் ரத்தத்தை போதுமான அளவிற்கு பம்ப் செய்ய முடிவதில்லை. இதனால் நுரையீரல்,  இதயத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மூளைக்கு ஆக்சிஜன் இல்லாததால் சோர்வு மயக்கம் ஏற்படுகிறது.

Also see... தூத்துக்குடியில் கௌதாரி பறவைகளை வேட்டையாடிய சிவில் இன்ஜினியர்கள் கைது... துப்பாக்கிகள் பறிமுதல்..

இந்த நோய் தாக்குதலால் ஜமுனா கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளார். 10ஆம் வகுப்போடு பள்ளிப்படிப்பை முழுக்கு போட்டுவிட்டார். உயிருக்கே ஆபத்தான நிலையில் பள்ளிக்கு சென்ற இடத்தில் ஏதாவது சிக்கல் நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் பெற்றோர்கள் நிறுத்திவிட்டனர். கடந்த 5 ஆண்டுகளாக தினமும் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார் ஜமுனா. வாழ்நாள் முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டரோடு வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படும் ஆனால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று மருத்துவர்கள் கைவிட்டு விட்டநிலையில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை விலைக்கு வாங்கி  மகளுக்கு கொடுத்து சிகிச்சை அளித்தனர். 

பெற்றோருடன் ஜமுனா

மகளின் சிகிச்சைக்காக ஒவ்வொரு மாதமும் 20,000 ரூபாய் வரை செலவு செய்கிறார்கள். ஆனாலும் அவர்கள் முகத்தில் கவலை எப்போதும் குடி கொண்டிருக்கிறது. இதுவரை 5க்கு மேற்பட்ட ஆக்சிஜன் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளன. தற்போது ரெட்கிராஸ் சொசைட்டி மூலமாக ஆக்சிஜன் இயந்திரம் கொடுத்துள்ளனர். தந்தை அன்னக்கொடி பேருந்தில் பணியாற்றும் போதெல்லாம் மகளின் கவலை தான். வேலையிலும் முழு கவனம் செலுத்த இயலாத நிலையில் சிகிச்சைக்காக பணம் தேவைப்படுமே என்பதற்காக வேலைக்கு சென்று வருகிறார். 

Also see... மனைவி, குழந்தைகளை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை - கடன் தொல்லையால் நிகழ்ந்த பரிதாபம்

பல நேரங்களில் கழிப்பறை சென்ற போது ஜமுனா மூர்ச்சையாகி கிடந்து விடுவார். உடனே கதவைத் தட்டி ஜமுனாவின் தாய் ஓடிவந்து அவரது வாயில் வாய் வைத்து ஊதிய பிறகு அவரை தூக்கி வந்து ஆக்சிஜன் இயந்திரம் அருகே அமர்த்தி ட்யூப்களை பொருத்திய பிறகு தான் ஜமுனா எழுந்து அமர்வார். இந்த உயிர்க்கான போராட்டம் தினசரி நடந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் வெளியான o2 (oxygen) திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் குழந்தைக்கு இதே போல் சிஸ்டமிக் ஸ்களிரோசிஸ் என்ற நோய் பாதிப்பு இருக்கும். அந்த குழந்தைக்காக நயன்தாரா போராடுவதைப் போல தான் ஜமுனாவின் பெற்றோரும் ஜமுனாவிற்காக போராடிக் கொண்டிருக்கின்றனர்.

தனது மகளின் நிலை குறித்து மிகவும் கவலைபட்ட அந்த தம்பதியினர் தமிழக முதல்வர் மகளின் சிகிச்சைக்காக ஏதாவது உதவி செய்ய மாட்டாரா என்ற வேண்டுகோளி கண்ணீரோடு வைத்துள்ளனர். நமக்கே கண்ணீர் வரும் மிக சோகமான நிகழ்வு தான். கண்டிப்பாக முதல்வர் ஸ்டாலின் ஜமுனாவின் உடல் நலத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நமக்கும் இருக்கிறது.

செய்தியாளர்: சங்கர், திண்டுக்கல்

First published:

Tags: Dindugal