PM Modi Speech Live Updates: தீபாவளி வரை ஏழை-எளிய மக்களுக்கு இலவசமாக ரேசன் - பிரதமர் நரேந்திர மோடி

Today News Tamil - Live Updates: கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | June 07, 2021, 17:46 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 11 DAYS AGO

    AUTO-REFRESH

    17:46 (IST)

    பிரதமரின் ஏழைகள் நலன் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தீபாவளி வரை நாங்கள் நீட்டித்துள்ளோம். இத்திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி இந்தியர்கள் இலவச ரேஷன் பெறுவர்: பிரதமர்

    17:39 (IST)

    குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது பாதுகாப்பானதா என்பதை அறிவதற்கான சோதனைகளை நாம் தொடங்கி இருக்கிறோம். வைரசுக்கு எதிரான நாட்டின் போரில் இது பெருமளவு உதவும்: பிரதமர்

    17:33 (IST)

    ஜூன் 21 முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி என பிரதமர் மோடி அறிவிப்பு.

    17:21 (IST)

    கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டன. சில நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் மேற்கொண்டு வருகின்றன.  நாட்டு மக்களுக்கு இதுவரை 23 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    மூக்கு வழியாக சொட்டு மருந்ததாக தரும் தடுப்பு மருந்து சோதனை நடந்து வருகிறது. மேலும் 3 தடுப்பூசிகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும்.

    17:18 (IST)

    கொரோனாவை எதிர்த்து போராட தடுப்பூசிதான் ஒரே ஆயுதம் - பிரதமர் மோடி

    17:12 (IST)

    கொரோனா 2-வது அலையில் சிக்கி இந்தியா மிகவும் மோசமான பாதிப்புகளை சந்தித்து உள்ளது. 100 ஆண்டுகள் இல்லாத பெறு தொற்றை உலகம் சந்தித்து உள்ளது. கொரோனாவிற்கு எதிரான போரில் தடுப்பூசிகள் உதவியாக இருந்தது. நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட போது ரயில், டேங்கர் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டது - பிரதமர் மோடி உரை

    17:9 (IST)

    பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்.

    14:15 (IST)

    கொரோனா பெருந்தொற்று காரணமாக  தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.இதன் அடிப்படையில் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறாது என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

    13:46 (IST)

    பிரதமர் மோடி இன்று  மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுடன் காணொளி மூலம் உரையாடுகிறார் .

    13:9 (IST)

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்.புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.