நாமக்கல்லில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பினை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்நிலையில் நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட கொண்டிச்செட்டிப்பட்டியில் சுமார் 7,606 கோடி ரூபாயில் 960 வீடுகள் புதிதாக கட்டப்பட்ட குடிசைமாற்று வாரிய குடியிருப்பு உள்ளது.
இந்த குடிசைமாற்று வாரிய குடியிருப்பினை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த குடிசைமாற்று வாரிய குடியிருப்புக்கு பணம் செலுத்தியவர்கள் அதிர்ச்சி அடைந்தார்.
அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கான பணிகளை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 960 வீடுகள் உள்ளன. அவற்றுள் 500 வீடுகளுக்கு முழு தொகையை செலுத்தி 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்பதாகவும் வீடுகளை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் ஏற்கனவே தாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருவதால் தற்போது கொரோனா சிகிச்சை மையமாக மாற்றினால் வீடுகள் கிடைப்பதற்கு மேலும் தாமதமாகும் என வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: விசைத் தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்...ரூ.1000 கோடி வர்த்தகம் பாதிப்பு
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.