”செப்டம்பர் 7-ம் தேதிதான் சந்திரயான் 2-க்கு முழுமையான வெற்றி” - மயில்சாமி அண்ணாதுரை

சர்வதேச அளவில் அனைவரும் உற்று நோக்க வேண்டிய நேரத்தில், சந்திரயான் - 2 தனது வெற்றியைக் பதிவு செய்துள்ளது. சர்வதேச அளவில் வர்த்தக ரீதியில் இந்தியா அனைத்து நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது என மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.

Web Desk | news18
Updated: July 22, 2019, 6:31 PM IST
”செப்டம்பர் 7-ம் தேதிதான் சந்திரயான் 2-க்கு முழுமையான வெற்றி” - மயில்சாமி அண்ணாதுரை
இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை
Web Desk | news18
Updated: July 22, 2019, 6:31 PM IST
செப்டம்பர் 7-ம் தேதி சந்திரயான் - 2 நிலவின் தென் துருவத்தில் இறங்கும் போது தான் முழுமையான வெற்றி பதிவாகும் என  இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

கோவை பாரதி நகரில் செய்தியாளரை சந்தித்து பேசிய இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, “ தற்போது சந்திரயான் - 2 தனது நீள் வட்ட பாதையில் சுற்ற துவங்கியுள்ளது. இது செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்கும். அப்படி இறங்கும் போது தான் முழுமையான வெற்றி பதிவாகும்.

சர்வதேச அளவில் அனைவரும் உற்று நோக்க வேண்டிய நேரத்தில், சந்திரயான் - 2 தனது வெற்றியைக் பதிவு செய்துள்ளது. சர்வதேச அளவில் வர்த்தக ரீதியில் இந்தியா அனைத்து நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.


இதன் மூலம் இந்தியா விண்வெளி துறையில் ஒரு புதிய சாதனையைக் படைத்துள்ளது” என மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.

Also Watch: குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய Good touch, Bad touch...
First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...