கோவிட்-19: மும்பையில் மாற்றுதிறனாளிகள், மூத்த குடிமக்களுக்காக ஸ்பெஷல் டிரைவ்-இன் தடுப்பூசி மையம்!

ஸ்பெஷல் டிரைவ்-இன் தடுப்பூசி மையம்

குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு ஒரு பெரிய கவலையை ஏற்படுத்தி உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா தொற்று பாதிப்புகள் இதுவரை இல்லாத அளவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்த கொடிய பெருந்தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசி செலுத்தி கொள்வது முக்கியமான படியாகும். இருப்பினும் எதிர்பாராத வகையில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் தடுப்பூசி மையங்களில் காணப்படும் அதிக கூட்டம், அதனால் ஏற்பட்டுள்ள தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்டவை தடுப்பூசி கிடைக்கும் என்று நம்புபவர்களுக்கு, குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு ஒரு பெரிய கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் உச்சத்தில் உள்ள நிலையில், தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தணிக்க, மகாராஷ்டிராவின் பிரஹன்மும்பை மாநகராட்சி (Brihanmumbai Municipal Corporation) ஒரு டிரைவ்-இன் தடுப்பூசி மையத்தை அமைத்து இதன் மூலம் விரைவான தடுப்பூசி செயல்முறையை நடத்துவதற்கான ஒரு சிறந்த வழியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை மாநகராட்சி நிர்வாகம் சமீபத்தில் நகரத்தின் முதல் டிரைவ்-இன் தடுப்பூசி மையத்தை அறிமுகப்படுத்தியது. இங்கு மாற்றுதிறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஒரு வாகனத்தில் உட்கார்ந்து, வரிசையில் நிற்காமல் தடுப்பூசி டோஸை பெறலாம்.

முதல் நாளில் 417 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசிகள் போடப்பட்டன. மும்பை நகரின் தாதரில் உள்ள கோஹினூர் டவரில் உள்ள ஒரு பார்க்கிங் பகுதியில் இந்த சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காகவே இது தொடங்கப்பட்டுள்ளது. இவர்களால் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாது என்பதால் இந்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

Also read... கொரோனா தடுப்பூசி பார்முலாவை இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம் - பில்கேட்ஸ்!

இந்த சிறப்பு டிரைவ்-இன் தடுப்பூசி மையத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தங்கள் வாகனத்தில் அமர்ந்தபடியே கோவிட்-19 தடுப்பூசி போட்டு கொள்ளலாம். தடுப்பூசி போட்ட பின் தங்கள் வாகனத்தின் உள்ளேயே சுமார் 30 நிமிடங்கள் காத்திருக்க அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனென்றால் தடுப்பூசியால் எவ்வித உடனடி பக்க விளைவும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்யவே காத்திருக்க வைக்கப்படுகிறர்கள்.

பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகே அவர்கள் அங்கிருந்து அனுப்பப்படுகின்றனர். இந்த சிறப்பு மையத்தில் மொத்தம் 8 மருத்துவர்கள் மற்றும் 18 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் போதுமான அளவு தடுப்பூசிகள் கிடைக்கும் பட்சத்தில், ஒரு நாளைக்கு சுமார் 5,000 பேருக்கு தடுப்பூசி போடும் திறன் இந்த மையத்திற்கு உள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.மும்பை நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு மஹிந்திரா குழும தலைவர் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். யூசர்கள் இந்த வீடியோவிற்கு கீழே பல கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர். மையங்கள் பல இருந்தாலும் தடுப்பூசிகளுக்கான நியமனங்கள் மற்றும் இடங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினர். அதிகமான குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக தடுப்பூசி எடுக்க மும்பையில் உள்ள தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுமாறு பலர் மஹிந்திராவிடம் கோரிக்கை விடுத்தனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: