• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • செல்வாக்கு மிகுந்த தலைவர்: சர்வதேச அளவில் மோடி முதலிடம்!

செல்வாக்கு மிகுந்த தலைவர்: சர்வதேச அளவில் மோடி முதலிடம்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த மே 8ம் தேதி, மோடியின் செல்வாக்கு என்பது 63 சதவிதமாக இருந்துள்ளது.  ஜூன் 15ம் தேதி நிலவரப்படி மோடிக்கான செல்வாக்கு என்பது 66 சதவீதமாக உள்ளது

  • Share this:
அமெரிக்காவைச் சேர்ந்த கருத்துக் கணிப்பு நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை  தலைமையிடமாக கொண்டு செயல்படும்  மார்னிக் கன்சல்ட்  தனது அரசியல் புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து பெற்ற தரவுகளின் அடிப்படையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.  இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மேர்கல் மற்றும் பிற நாட்டு தலைவர்களை விட அதிக செல்வாக்கு வாய்ந்த தலைவராக இந்திய பிரதமர் மோடி இருப்பது தெரியவந்தது.

அதேவேளையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அவரது செல்வாக்கு 20சதவீதம் சரிந்திருப்பதும் தெரியவந்தது. கடந்த  2019ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்  பிரதமர் நரேந்திர மோடிக்கு 82 சதவீதம் பேர்ஆதரவும், 11 சதவீதம் பேர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த மே 8ம் தேதி, மோடியின் செல்வாக்கு என்பது 63 சதவிதமாக இருந்துள்ளது.  ஜூன் 15ம் தேதி நிலவரப்படி மோடிக்கான செல்வாக்கு என்பது 66 சதவீதமாக உள்ளது.  28 சதவீதம் பேர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இத்தாலியின் பிரதமர் மரியோ டிராகி 65 சதவீதம் ஆதரவு பெற்று இரண்டாவது இடமும்,  மெக்சிகன் அதிபர் ஆண்ட்ரூஸ் மேனுவல் லோபஸ் ஆப்ரேடர்  மூன்றாவது இடமும் பிடித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 53 சதவீதம் பேர் ஆதரவும் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்கலுக்கு 53 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: