ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

"அரசு கடுக்காய் கொடுக்காது".. அமைச்சர் சொன்ன பதில்.. அவையில் சிரிப்பலை

"அரசு கடுக்காய் கொடுக்காது".. அமைச்சர் சொன்ன பதில்.. அவையில் சிரிப்பலை

அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு

கடுக்காய் தொழிற்சாலை கேட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில் அவையில் சிரிப்பலையை உண்டாக்கியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் பேசுகையில், “காலையில் இஞ்சி, நன்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் உண்டு காலை ஊண்றி கோலை வீசி குலுங்கி நடப்பார் என்று கூறுவார்கள். கடுக்காய் தின்றவர்கள் மிடுக்காய் நடப்பார்கள் என்பார்கள். எங்கள் கல்வராயன் மலையிலும், சேலம் மாவட்டத்தில் இருக்கும் சின்ன கல்வராயன் மலையிலும் கடுக்காய் அதிகமாக விளைகிறது. சிறு தரகர்களால் அந்த மக்களுக்கு உரிய தொகை கிடைக்காமல் இருக்கிறது.ஆகவே சாயம் தயாரிப்பதற்கும், மருத்துவ குணம் கொண்ட கடுக்காய் தொழிற்சாலை சங்கராபுரம் தொகுதியில் உருவாக்கி தர அமைச்சர் முன் வருவாரா” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "உறுப்பினரின் கோரிக்கைக்கு அரசு கடுக்காய் கொடுக்காமல் இருக்கும்" என பதிலளித்தார். அமைச்சரின் இந்த பதில் அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. தொடர்ந்து மற்ற கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு அமைச்சர் அமர்ந்தார்.

First published:

Tags: Thangam Thennarasu, TN Assembly