ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

இன்று கூடுகிறது திமுக பொதுக்குழு! தலைவராகும் முக ஸ்டாலின்.. உற்சாகத்தில் தொண்டர்கள்!

இன்று கூடுகிறது திமுக பொதுக்குழு! தலைவராகும் முக ஸ்டாலின்.. உற்சாகத்தில் தொண்டர்கள்!

மீண்டும் திமுக தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் ஸ்டாலின்

மீண்டும் திமுக தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவுக்குப் பின் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல்முறை திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  திமுக பொதுக்குழுக்கூட்டம் முதலமைச்சர், அக்கட்சியின் தலைவரான முக ஸ்டாலின் தலைமையில் கீழ்ப்பாக்கம் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திமுக தலைவராக ஸ்டாலினும், பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் மீண்டும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இன்றைய கூட்டத்தில் 2600 பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 4,000 பேர் பங்கேற்க உள்ளனர்.

  முன்னதாத அக்டோபர் 7ஆம் தேதி திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மேற்கண்ட பதவிகளுக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் ஸ்டாலின், துரைமுருகன், டிஆர் பாலு ஆகியோர் போட்டியின்றி தேர்வானார்கள். இதையடுத்து இரண்டாம் முறையாக மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவராகிறார்.

  இதையும் படிங்க: எடப்பாடியில் அணியில் இருந்து ஓ.பி.எஸ். முகாமுக்கு தாவிய முன்னாள் எம்பி… அதிமுகவில் மீண்டும் பரபரப்பு

  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் வெளியாகிறது.இதற்கு முன்னதாக கட்சியின் கிளை அமைப்பு தொடங்கி மாவட்ட செயலாளர் வரையிலான பதவிகளுக்கான திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவுக்குப் பின் திமுக தலைவராக 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். தற்போது இரண்டாவது முறையாக அவர் போட்டியின்றி தலைவராகிறார்.அன்மையில் திமுகவில் இருந்து சுப்புலக்ஷ்மி ஜகதீசன் விலகி நிலையில், அவர் வகித்திருந்த துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பானது மக்களவை எம்பி கனிமொழிக்கு வழங்கப்பட்டுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: CM MK Stalin, DMK, Durai murugan, T.r.balu