வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத மின் சலுகைகள் தமிழகத்தில் - அமைச்சர் தங்கமணி பதில்

கடந்த 4 ஆண்டுகளில் 11 ,512 கோடி ரூபாய் மதிப்பில் மின் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் தங்கமணி, வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத சலுகை தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத மின் சலுகைகள் தமிழகத்தில் - அமைச்சர் தங்கமணி பதில்
அமைச்சர் தங்கமணி
  • News18
  • Last Updated: July 21, 2020, 9:31 PM IST
  • Share this:
தமிழகத்தில் மின் கட்டண வசூல் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், ஊரடங்கில் வீட்டில் இருந்த மக்களுக்கு தமிழக அரசு அபராதம் வசூலிப்பதாக சாடியுள்ளார். ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள மின்துறை அமைச்சர் தங்கமணி கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மின் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் மின் கட்டணம் அதிகமாக வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா ஊரடங்கில் பொதுமக்கள் வீட்டில் இருந்ததற்கு அரசாங்கம் போடும் அபராதத் தொகை என சாடியுள்ளார்.

கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் வழங்கப்படுவது போல் தமிழகத்தில் மின் கட்டணச் சலுகை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், மற்ற மாநில அரசுகளால் முடியும் போது தமிழக அரசால் ஏன் முடியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.


தமிழக அரசிடம் பணம் இல்லையா? இல்லை தமிழக அரசின் நிதி நிலைமை சரியில்லையா? கஜானா காலியாக இருக்கிறதா என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

நிதி நிலைமை சரியாக இருக்கிறது என்றால் மக்களுக்கு சலுகை வழங்க அரசுக்கு மனமில்லையா எனவும் கூறியுள்ளார். இதனிடையே, ஸ்டாலினின் கேள்விக்கு அறிக்கை மூலம் பதில் அளித்துள்ள மின் துறை அமைச்சர் தங்கமணி, மின் கட்டண முறையை நீதிமன்றமே ஏற்றுக்கொண்ட பிறகு மின் கட்டண கணக்கீடு முறையில் குளறுபடி என திமுக தலைவர் உண்மைக்கு மாறான செய்தியை கூறி மக்களை குழப்பி வருவதாக தெரிவித்துள்ளார்.


படிக்க: மரத்தை வெட்டி சிபிஐ அதிகாரியிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சாத்தான்குளம் காவல் ஆய்வாளர்

படிக்க: புதுக்கோட்டை அருகே 108 ஆம்புலன்சில் நடந்த பிரசவம் - அழகான ஆண் குழந்தை பிறந்தது
கடந்த 4 ஆண்டுகளில் 11 ,512 கோடி ரூபாய் மதிப்பில் மின் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் தங்கமணி, வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத சலுகை தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கேரளாவில் 300 யூனிட்டிற்கு 1165 ரூபாய் வசூல் செய்யப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், திமுக ஆட்சியில் அரைகுறை மின்சாரத்திற்கு எவ்வித சலுகையும் வழங்கப்படவில்லை என சாடியுள்ளார்.
First published: July 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading