ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி கருத்துக்களை வெளியிட பாஜக பிரமுகருக்கு நீதிமன்றம் தடை

அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி கருத்துக்களை வெளியிட பாஜக பிரமுகருக்கு நீதிமன்றம் தடை

அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதித்த நீதிபதி மனு குறித்து நிர்மல் குமார் பதிலளிக்க உத்தரவு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக நிர்வாகிக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியை தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் ட்விட்டரில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மேலும், தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்தும் அமைச்சர் செந்தில் பாலாஜியை நிர்மல் குமார் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், தன்னை குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட நிர்மல் குமாருக்கு தடை விதிக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், அவதூறு பேச்சு குறித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டும் தம்மை பற்றி நிர்மல்குமார் அவதூறாக பேசிவருவதாக கூறினார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி...

இதனையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதித்த நீதிபதி மனு குறித்து நிர்மல் குமார் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Published by:Arunkumar A
First published:

Tags: BJP, Senthil Balaji, Social media