முகப்பு /செய்தி /JUST NOW / உத்தரப்பிரதேசத்தில் 2வது உலக அதிசயம்!: நொய்டாவில் தாஜ்மஹால் வடிவில் ஆராய்ச்சி மையத்தை அமைத்த மைக்ரோசாப்ட் நிறுவனம்

உத்தரப்பிரதேசத்தில் 2வது உலக அதிசயம்!: நொய்டாவில் தாஜ்மஹால் வடிவில் ஆராய்ச்சி மையத்தை அமைத்த மைக்ரோசாப்ட் நிறுவனம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா நகரில் ஆராய்ச்சி மையத்தை மைக்ரோசாப்ட் கட்டமைத்துள்ளது. குறிப்பாக பாரம்பரிய சின்னமான தாஜ்மஹாலின் அமைப்பை ஒத்து கட்டப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா நகரில் ஆராய்ச்சி மையத்தை மைக்ரோசாப்ட் கட்டமைத்துள்ளது. குறிப்பாக பாரம்பரிய சின்னமான தாஜ்மஹாலின் அமைப்பை ஒத்து கட்டப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா நகரில் ஆராய்ச்சி மையத்தை மைக்ரோசாப்ட் கட்டமைத்துள்ளது. குறிப்பாக பாரம்பரிய சின்னமான தாஜ்மஹாலின் அமைப்பை ஒத்து கட்டப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் முழுக்க முழுக்க பளிங்கு கற்களால் கட்டப்பட்டது. பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் அதன் உட்கட்டமைப்பு அமைக்கப்பட்டிருக்கும். உலக அதிசயத்தில் ஒன்றான இந்த தாஜ்மஹால் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. இந்தக் கட்டட வடிவமைப்பில் ஈர்க்கப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் அமையவிருக்கும் புதிய ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தை வடிவமைத்திருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் 2வது உலக அதிசயம்

அமெரிக்கா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் தனது ஆராய்ச்சி மையத்தை அமைத்திருக்கும் நிலையில் தற்போது மிகப் பிரமாண்டமான முறையில் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா நகரில் ஆராய்ச்சி மையத்தை மைக்ரோசாப்ட் கட்டமைத்துள்ளது. குறிப்பாக பாரம்பரிய சின்னமான தாஜ்மஹாலின் அமைப்பை ஒத்து கட்டப்பட்டுள்ளது. நொய்டாவை தளமாகக் கொண்ட மைக்ரோசாப்ட் ஐடிசி பெங்களூரு மற்றும் ஹைதராபாத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது மையமாகும்.

இதில் அந்நிறுவனத்தின் முதல் பொறியியல் மையமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. தாஜ்மஹாலால் ஈர்க்கப்பட்ட மைக்ரோசாப்ட் மேம்பாட்டு மையம் நொய்டாவில் உள்ள ஆறு மாடி கட்டிடத்தின் முதல் மூன்று தளங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. “நாங்கள் வடிவமைத்ததிலேயே மிகவும் அழகான வடிவமைப்பு என்றால் புதிதாக நொய்டாவில் திறக்கப்பட்டிருக்கும் எங்களின் அலுவலகம் தான். எங்களின் குழு நாங்கள் நினைத்தை விட அதிகமாக உழைத்து சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தில் 2வது உலக அதிசயம்

உற்பத்தியை அதிகரித்து வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையிலும், செயற்கை நுண்ணறிவு (AI), புதிய கேமிங் பிரிவு ஆகிய துறைகளை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த மையம் அமையும்” என்று நிறுவனர் கூறியுள்ளார். நொய்டாவை தளமாகக் கொண்ட மைக்ரோசாப்ட் டெவலப்மென்ட் சென்டரில் வால்ட் கதவுகள், வளைவுகள், மற்றும் நாட்டின் பணக்கார கைவினைத்திறனுக்கு அஞ்சலி செலுத்தும் பளிங்கு குவிமாடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பணியிடத்தின் இந்த பகுதி மாற்றியமைக்கப்பட்ட குவிமாடம் மற்றும் தரையில் பளிங்கு கற்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பானது தாஜ்மஹாலில் கைவினைத்திறனை பிரதிபலிக்க முயற்சிக்கிறது மேலும் தோட்டங்கள், இருக்கைகள், வெளிப்புற வடிவமைப்புகள் சிறந்த கட்டமைப்பை பிரதிபலிக்கிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Microsoft, Tajmahal