• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • அதிமுக அரசு நிறுத்தி வைத்திருந்த எம்.ஜி.ஆர் ஆணையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் - முதல்வரிடம் எம்.பி ரவிக்குமார் வேண்டுகோள்

அதிமுக அரசு நிறுத்தி வைத்திருந்த எம்.ஜி.ஆர் ஆணையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் - முதல்வரிடம் எம்.பி ரவிக்குமார் வேண்டுகோள்

எம்.பி ரவிக்குமார்

எம்.பி ரவிக்குமார்

2006 முதல் 2011 வரை அன்றைய திமுக ஆட்சியின் போது தமிழக அரசின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களில் கலப்புத் திருமணம் செய்துகொண்ட 287 பேர் நியமனம் பெற்றுள்ளனர்.

  • Share this:
    முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு நிறுத்தி வைத்த எம்ஜிஆர் பிறப்பித்த ஆணையை மீண்டும் நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் இன்று தமிழ் நாடு முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:

    “ தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அரசுப் பணிக்கு நியமனம் செய்யும்போது முன்னுரிமை தரப்பட வேண்டியவர்களின் பட்டியலில் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களையும் சேர்த்துத் தமிழக அரசு 1986 ஆம் ஆண்டில் ஆணையிட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    2006 முதல் 2011 வரை அன்றைய திமுக ஆட்சியின் போது தமிழக அரசின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களில் கலப்புத் திருமணம் செய்துகொண்ட 287 பேர் நியமனம் பெற்றுள்ளனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாகக் கலப்புத் திருமணம் செய்து கொண்ட எவரும் ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படவில்லை.

    Also Read : கோவைியல் இஸ்லாமியர்கள் மயனாத்திற்கு செல்லும் பாதை தடுப்பு - வனத்துறையினர் நடவடிக்கையால் பரபரப்பு

    மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தைக் கடந்த அதிமுக அரசு செயல்படுத்தவில்லை. சமூக நீதியில் அக்கறை கொண்ட தங்களது தலைமையிலான அரசு இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உரிய ஆணையை வழங்குமாறு வேண்டுகிறேன்” என்றுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: