திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் அமைந்துள்ளது பஞ்சலிங்க அருவி. மலைகளின் நடுவே இந்த அருவி பயணிப்பதால் மூலிகை தண்ணீர் எனவும் இங்கு குளித்து வந்தால் உடல் நலமாகும் எனவும் நம்பப்படுகிறது. கடந்த ஒருவருடமாக கொரோனா நோய் தொற்றால் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் நீர்வரத்து குறைந்து அருவி எங்கும் பரவலாக ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கத்தை குறைக்க பஞ்சலிங்க அருவி பகுதிக்கு அதிக அளவில் வரும் பொதுமக்கள் அருவி நீரில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்கின்றனர். ஜில்லென விழும் அருவி நீரில் சிறுவர்களும் பெண்களும் ஆண்களும் ஆராவாரமாக சத்தமிட்டு உற்சாக குளியல் போடுகின்றனர்.
ஓராண்டுக்கு மேலாக முடங்கியிருந்த பஞ்சலிங்க அருவியில் தற்போது சுற்றுலாபயணிகள்கூட்டம் கூட்டமாக குவிந்து வருவதால் இந்த அருவி மீண்டும் களைகட்ட தொடங்கியுள்ளது.
Published by:Arun
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.