Home /News /live-updates /

ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முறை லாட்டரியில் ஜாக்பாட்... லட்சதிபதியான விவசாயி

ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முறை லாட்டரியில் ஜாக்பாட்... லட்சதிபதியான விவசாயி

ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முறை லாட்டரியில் ஜாக்பாட்

ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முறை லாட்டரியில் ஜாக்பாட்

ஜோன்ஸுக்கு இரண்டாம் முறையாக அதிர்ஷ்டம் கை கூடியது. ஆம் லாட்டரியில் அவருக்கு ஒரு லட்சம் டாலர் பரிசு கிடைத்தது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.80 லட்சம் ஆகும்.

    நாம் எதிர்பார்க்காத பெரும் நன்மை, நாம் எதிர்பார்க்காத சூழலில் திடீரென்று நடைபெறுவதைத் தான் அதிர்ஷ்டம் என்கிறோம். அதிலும், லாட்டரி விற்பனை அல்லது சூதாட்டங்கள் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட நாடுகளில் அதிர்ஷ்டம் என்பது அவ்வபோது யாரோ ஒரு நபருக்கு வந்து சேரும் விஷயம்தான்.

    ஆனால், ஒரு தனிநபரை கணக்கில் எடுத்துக் கொண்டால் அவரது வாழ்வில் ஒருமுறை லாட்டரியில் பரிசு விழுந்தாலே பெரிய விஷயம் தான். ஆனால், ஒரே நபருக்கு ஒரு நாளில் இரண்டு முறை அதிர்ஷ்டம் கை கூடி வந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதுவும் அடுத்தடுத்து இரண்டு முறை லாட்டரி பரிசு கிடைத்ததில் அந்த நபர் லட்சாதிபதியாகவே மாறி விட்டார்.

    அமெரிக்காவைச் சேர்ந்தவர்

    அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்தவர் வில்லியம் ஜோன்ஸ். இவர் விவசாயம் செய்து வருகிறார். வீட்டில் கொஞ்சம் இறைச்சி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு தோன்றியது. வீட்டில் இறைச்சி இருந்தபோதிலும், அதில் கிரில் செய்வதற்கான கேஸ் இல்லை. இதனால், அருகாமையில் உள்ள மளிகை ஸ்டோருக்கு கேஸ் வாங்குவதற்காக சென்றார். முன்னதாக, அதே நாளில் ஸ்கிராட்ச் கார்டு ஒன்றை வாங்கிய ஜோன்ஸுக்கு 500 டாலர் பரிசு கிடைத்தது.

    Also Read : சிசிடிவியில் சிக்கிய மர்ம உருவம்; அதிர்ச்சியூட்டும் திகில் வீடியோ.!

    அது சிறிய தொகைதான் என்றாலும்கூட மறுமுறை மளிகை ஸ்டோருக்கு சென்றபோது பெரும் பரிசு கொண்ட லாட்டரி டிக்கெட்டை வாங்குவது என்று அவர் முடிவு செய்தார். அதாவது 100 மில்லியன் டாலர் பரிசு கொண்ட பெரும் லாட்டரி டிக்கெட் ஒன்றை அவர் வாங்கினார்.

    இரண்டாவது அதிர்ஷ்டம்

    உங்களுக்கு நம்புவதற்கு சிரமமாக இருக்கலாம். ஆனால் ஜோன்ஸுக்கு இரண்டாம் முறையாக அதிர்ஷ்டம் கை கூடியது. ஆம் லாட்டரியில் அவருக்கு ஒரு லட்சம் டாலர் பரிசு கிடைத்தது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.80 லட்சம் ஆகும். திருமணத்திற்காக பெற்ற கடனை இந்தப் பணத்தை கொண்டு அடைக்கப் போவதாக ஜோன்ஸ் கூறினார்.

    இதேபோன்று மளிகை ஸ்டோரில் பரிசு வென்ற மற்றொரு நபர்

    தெற்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபருக்கு இதேபோன்று மளிகை ஸ்டோருக்கு சென்றபோது இதேபோன்று பெரும் பரிசுத்தொகை லாட்டரி மூலமாக கிடைத்தது.

    அந்த நபர் ஒரு மில்லியன் டாலர் பரிசுத் தொகைக்கான லாட்டரி டிக்கெட்டை வாங்கியதோடு மட்டுமல்லாமல், அந்தப் பரிசுத் தொகையை இரட்டிப்பாக மாற்றும் பவர்பிளே பட்டனும் பெற்றிருந்தார்.

    அடுத்த நாள், அவருக்கு பரிசு கிடைத்ததில் அந்த நபர் வாயடைத்துப் போனார். அதுவும் இரட்டிப்பு பரிசு என்பதால் 2 மில்லியன் டாலர் கிடைத்தது. இது இந்திய மதிப்பில் ரூ.15.5 கோடி ஆகும்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி