ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

கடலை பருப்பு இல்லாமல் மசால் வடை செய்ய முடியுமா..? இதோ உங்களுக்கான ரெசிபி...

கடலை பருப்பு இல்லாமல் மசால் வடை செய்ய முடியுமா..? இதோ உங்களுக்கான ரெசிபி...

கடலை பருப்பு இல்லாமல் மசால் வடை

கடலை பருப்பு இல்லாமல் மசால் வடை

மசால் வடையை பருப்பே இல்லாமல் இனி செய்யலாம். அதுவும் ஆரோக்கியமான வகையில் செய்யலாம். எப்படி தெரியுமா..? அதே ஆர்வத்தோடு ரெசிபியை படிங்க...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வடை என்றாலே அது பருப்பில் செய்வதாகத்தான் இருக்கும். அது மெது வடையாக இருந்தாலும் சரி, மசால் வடையாக இருந்தாலும் சரி... ஆனால் இனி அப்படியொரு ரூல்ஸெல்லாம் இனி இருக்காது. மசால் வடையை பருப்பே இல்லாமல் இனி செய்யலாம். அதுவும் ஆரோக்கியமான வகையில் செய்யலாம். எப்படி தெரியுமா..? அதே ஆர்வத்தோடு ரெசிபியை படிங்க...

தேவையான பொருட்கள் :

ஸ்வீட் கார்ன் - 1

காய்ந்த மிளகாய் - 3

பூண்டு - 5

இஞ்சி - 1 துண்டு

மிளகு - 1/2 tsp

சீரகம் - 1/2 tsp

சோம்பு - 1 /2 tsp

அரிசி மாவு - 4 tsp

வெங்காயம் - 2 கைப்பிடி

சிறு கீரை - 1 கைப்பிடி

உப்பு - தே.அ

செய்முறை :

ஸ்வீட் கார்னை உறித்து எடுத்துக்கொள்ளுங்கள். முதலில் மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய் இஞ்சி , பூண்டு, மிளகு, சீரகம் , சோம்பு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். பின் ஸ்வீட் கார்ன் சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளுங்கள்.

அரைத்ததும் அதை ஒரு கிண்ணத்தில் வழித்து அதில் அரிசி மாவு, வெங்காயம், சிறுகீரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.

சுட்ட கத்தரிக்காய் குழம்பு செய்ய தெரியுமா..? இதுவரைக்கும் இல்லைனா இன்னைக்கே செய்ய ரெசிபி...

பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

அவ்வளவுதான் ஸ்வீட்கார்ன் வடை தயார்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Evening Snacks, Sweet Corn