தேர்வர்களின் இடதுகை பெருவிரல் ரேகை, ஐந்தாவது தெரிவு! டி.என்.பி.எஸ்.சி நடைமுறையில் அதிரடி மாற்றங்கள்

முறைகேடுகளை தொடர்ந்து குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ ஆகிய தேர்வுகள் இனி  இரண்டு நிலைகள் கொண்ட தேர்வாக நடைபெறும்.. உள்ளிட்ட 5புதிய மாற்?

தேர்வர்களின் இடதுகை பெருவிரல் ரேகை, ஐந்தாவது தெரிவு! டி.என்.பி.எஸ்.சி நடைமுறையில் அதிரடி மாற்றங்கள்
மாதிரிப் படம்
  • Share this:
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் முறைகேடுகள் அம்பலமானதைத் தொடர்ந்து, முறைகேடுகளைத் தடுக்க தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தேர்வு எழுத வந்தர்கள், உண்மையிலேயே தேர்வர்கள்தானா என்பதை உறுதி செய்ய சோதனை மேற்கொள்ள, தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு, ஒரு மணி நேரத்திற்கு முன்னரே வர வேண்டும் என்று தேர்வாணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

காலை, மாலை என இரண்டு தேர்வுகள் நடைபெற்றால், மாலை நடைபெறும் தேர்வு 3 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுவரை, விடைத்தாளில் A, B, C, D என்ற நான்கு விடைகளில், சரியானதைத் தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமே வட்டங்கள் கொடுக்கப்பட்ருந்தன. தற்போது, விடை தெரியவில்லை என்பதை குறிக்க E என்ற 5-வது கட்டம் கொடுக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதனால், தேர்வர்கள் கண்டிப்பாக ஒரு கட்டத்தை நிரப்பியே ஆக வேண்டும்.

தேர்வு முடிந்ததும், விடைளிக்கும் பகுதியும், தேர்வர்களின் விபரங்கள் அடங்கிய பகுதியும், தேர்வர்கள் முன்னிலையிலேயே தனித்தனியாக பிரித்து, தேர்வர்களில் சிலரிடம் கையொப்பம் பெற்று, சீல் வைக்கப்படும் என தெரிவித்துள்ள தேர்வாணையம், இதனால், எந்த ஒரு குறிப்பிட்ட நபரின் விடைத்தாளையும் தனியாக இனம்காண்பது தடுக்கப்படும் என்று கூறியுள்ளது.

விடைத்தாளை தனியாக அடையாளம் காண்பதைத் தவிர்க்க, தேர்வர்களின் கையொப்பத்திற்கு பதிலாக, அவர்களின் இடதுகை பெருவிரல் ரேகை பெறப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தேர்வு மையங்களிலிருந்து, சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட அதி நவீன வாகனங்களில் விடைத்தாள் எடுத்துச் செல்லப்படும் என்று கூறியுள்ள தேர்வாணையம், இவை அனைத்தையும் நேரலையில் கண்காணிக்கும் வகையில், தேர்வாணைய அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

தேர்வர்களுக்கும், தேர்வாணையத்திற்கு இடையில் பிணைப்பை உறுதி செய்யும் வகையில் தேர்வாணைய இணையதளத்தில் சிறப்பு தகவல் தளம் உருவாக்கப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த தளத்தின் மூலம் தேர்வர்கள் அளிக்கும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
First published: February 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்