ஹேப்பி பர்த்டே வைகை எக்ஸ்பிரஸ் - ஒரு குட்டி பிளாஷ்பேக்!

வைகை எக்ஸ்பிரஸ் (vaigai express)

வைகை சூப்பர் ஃபாஸ்ட் ரயிலானது 43 ஆண்டுகளுக்கு முன்னர் மீட்டர் கேஜ் இருப்புப் பாதையில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே 105 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டு சாதனை படைத்த வரலாறு கொண்டது.

  • Share this:
மதுரை: வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கிய 44வது ஆண்டு விழாவை பயணிகள் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். இந்த நாளில் வைகை எக்ஸ்பிரஸ் குறித்த சில முக்கியமான தகவல்களை தெரிந்துகொள்வதும் அவசியம்.

மதுரைக்கும் சென்னைக்கும் இயக்கப்படும் பகல் நேர ரயில் தான் வைகை எக்ஸ்பிரஸ். மதுரை வைகை எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் சேவை 1977 ஆகஸ்ட் 15ஆம் நாள் தொடங்கப்பட்டு 44ஆம் ஆண்டு தொடங்கியதை அடுத்து பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர், மேலும் வைகை எக்ஸ்பிரஸ் பைலட் மற்றும் ரயில்வே பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

முதல் அதிவிரைவு ரயில்:

வைகை சூப்பர் ஃபாஸ்ட் ரயிலானது 43 ஆண்டுகளுக்கு முன்னர் மீட்டர் கேஜ் இருப்புப் பாதையில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே 105 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டு சாதனை படைத்த வரலாறு கொண்டது.

Also Read: பெற்றோர்களே உஷார்: கொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இப்படி ஒரு ஆபத்தா?

44 வருடங்களுக்கு முன்னர் தென் மாவட்ட மக்கள் சென்னைக்கு வர வேண்டும் என்றால் இரவு நேரத்தில் இயக்கப்படும் பாண்டியன் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களைத் தான் நம்பி இருக்க வேண்டியிருந்தது. இவற்றை விட்டால் அரசுப் பேருந்துகளில் அல்லது கொல்லம் மெயில் போன்ற பாசஞ்சர் ரயில்களின் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்தனர்/

பகல் நேரத்தில் ஒரு ரயில் விட்டால் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அனைத்து தரப்பினரும் ரயில்வே வாரியத்துக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

தென் மாவட்ட மக்களின் வெகு நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த 1977ம் ஆண்டு சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதியன்று பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயிலாக வைகை எக்ஸ்பிரஸ் தொடங்கி வைக்கப்பட்டது. மதுரையிலிருந்து சென்னைக்கு காலையிலும், சென்னையிலிருந்து மதுரைக்கு மதியத்திலும் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

Also Read:  தங்கம் வென்ற தங்க மங்கையை கெளரவப்படுத்த தவறிய தமிழக அரசு!

மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் இந்த வைகை எக்ஸ்பிரஸ் தென் மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது. டிக்கெட் விலையும் இரவு நேர ரயில்களை விட குறைவு தான் என்பதால் சாமானியர்களின் பயணத் தேவைக்கு வைகை எக்ஸ்பிரஸ் பெரிதும் கைகொடுக்கிறது.

தற்போது இயக்கப்பட்டு வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலானது ஜெர்மன் தொழில்நுட்பத்தில் எல்எச்பி (Linke Hofmann Busch-LHB) பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுவிட்டன. இவ்வகையான தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பெட்டிகள் மிக இலகுரகமாவும், இருக்கைகளும் கூடுதல் வசதியுடனும் உருவாக்கப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கதாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னர் அந்த அளவுக்கு வசதிகள் இல்லாமல் இருந்துவந்த வைகை எக்ஸ்பிரஸ் பெட்டிகள், தொடர் கோரிக்கையை ஏற்று நவீன ரக மாற்றங்களாகி பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வைகை எக்ஸ்பிரஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
Published by:Arun
First published: