அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் - எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பரபரப்பு கருத்து

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் - எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பரபரப்பு கருத்து
ராஜன் செல்லப்பா
  • News18
  • Last Updated: June 8, 2019, 11:36 AM IST
  • Share this:
அதிகாரமிக்க ஒற்றைத்தலைமையின் கீழ் அதிமுக செயல்பட வேண்டும் என்று அக்கட்சி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பேட்டியளித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. தேனி தொகுதியில் மட்டுமே அக்கட்சி வென்றது.

இந்நிலையில், செய்தியாளர்களை இன்று சந்தித்த அக்கட்சி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என்று கூறியுள்ளார்.


அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி என்று இரண்டு தலைமை இருக்கும் நிலையில், ராஜன் செல்லப்பா இவ்வாறு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், “தினகரன் என்ற மாயை தற்போது இல்லை. தேர்தலில் முக்கிய தொகுதிகளை அதிமுக இழந்துவிட்டது. தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க இன்னும் பொதுக்குழு கூட்டாதது ஏமாற்றம் அளிக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

“அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதில் மக்களிடையே குழப்பம் உள்ளது. சுயநலம் இல்லாத மக்கள் பணியாற்றக்கூடிய தலைமை வேண்டும். எந்த செல்வாக்குள்ள கட்சியாக இருந்தாலும், அதிகாரமிக்க தலைமை வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.எந்த பூசல் இருந்தாலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் யாரும் கட்சியை விட்டுச் செல்ல மாட்டோம் என்றும் ராஜன் செல்லப்பா கூறினார்.

”ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் 10 முறை அமைச்சரவை மாறியிருக்கும். புகாருக்கு உள்ளான அமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதா சமாதிக்கு செல்லாதது ஏன்? அவர்களை தடுத்தது யார்” என்றும் அவர் கூறினார்.

First published: June 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading