ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

திமுக தலைவராக போட்டியின்றி தேர்வானார் மு.க.ஸ்டாலின்!

திமுக தலைவராக போட்டியின்றி தேர்வானார் மு.க.ஸ்டாலின்!

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் பதவிக்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி மீண்டும் தேர்வாகின்றனர்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், தலைவர் பதவிக்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாகினர். இதனால் இரண்டாம் முறையாக மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவராகிறார்.

  திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. அதன்படி காலை 10 மணி முதல் மாலை 5 வரை நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் மூன்று பேரையும் எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

  இதேபோல் பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கும் பொருளாளர் டி ஆர் பாலுவுக்கும் 30க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

  இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற ஒன்பதாம் தேதி அமைந்தகரையில் நடைபெற உள்ள திமுக பொதுக்குழுவில் வெளியாக உள்ளது.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: DMK, MK Stalin