Tamil News Live | இன்றைய டாப்10 செய்திகள்

Breaking News Live Updates | amil Top 10 News Today | உள்ளூர் முதல் உலகநடப்புகள் வரை அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்

 • News18 Tamil
 • | January 04, 2022, 18:53 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 23 DAYS AGO

  AUTO-REFRESH

  18:50 (IST)

  இன்றைய டாப்10 செய்திகள் | Tamil Top 10 News Today

  1) பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கரும்புகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல்  செய்ய உத்தரவு.

  2) கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாதகமாக நடந்து கொள்ள பேரம் பேசப்பட்டவர்கள் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பேட்டி. சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகியை அடையாளம் காட்டியதால் பரபரப்பு .

  3) தன் மீது பொய்குற்றச்சாட்டு பேசப்படுவதாக அதிமு நிர்வாகி இளங்கோவன் விளக்கம். பேரம் பேசிய நபரை நேரில் பார்தது கூட இல்லை என விளக்கம்.  


  4) ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை. 

  5) பெரம்பலூர் எம்.எல்.ஏவை தொடர்ந்து அறந்தாங்கி எம்எல்ஏ-வுக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

  6) கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அறிவிப்பு. பஞ்சாபில் பள்ளி, கல்லூரிகள் மூடல்.

  7) அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து தேர்வுத்துறை உத்தரவு.


  8) புதுக்கோட்டையில் குண்டடிப்பட்டு உயிரிழந்த சிறுவனில் உடல் அடக்கம். வீட்டிற்கு கொண்டு செல்லாமல் மயானத்திற்கு நேரடியாக கொண்டு சென்றதால் போலீசாருடன் உறவினர்கள் தள்ளுமுள்ளு.

  9) மணிப்பூரில் 4800 கோடி மதிப்பில் புதிய திட்டடங்களை தொடங்கி வைத்தார் மோடி. இந்தியாவின் வளர்ச்சியில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என பேச்சு. 

  10) தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷர்துல் தாகூர் அபார பந்துவீச்சு. 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தல்.

  16:34 (IST)

  மெட்ரோ நகரங்களில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிப்பு

  நாட்டில் பரவும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 75 சதவிகிதம் பேர், டெல்லி, மும்பை மற்றும் கொல்த்தா போன்ற மெட்ரோ நகரங்களை சேர்ந்தவர்களாக இருப்பதாக, தடுப்பூசி பணிக்குழுவின் தலைவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா கொரோனா மூன்றாவது அலையில் இருப்பதாகவும், இதற்கு முழு முதற் காரணம் ஒமைக்ரான் திரிபு தான் எனவும் குறிப்பிட்டார். கடந்த நான்கைந்து நாட்களில் தினசரி பாதிப்பில் ஏற்பட்டுள்ள, திடீர் உயர்வு தொடர்பான ஆவணங்கள் இதனை உறுதி செய்வதாக கூறினார். அதேசமயம், தொற்று பரவலை தடுக்க தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருப்பதாகவும், 12 மாதங்கள் வரை அதன் நோய் எதிர்ப்பு திறன் உடலில் இருப்பதாகவும், என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.

  15:22 (IST)

  அறந்தாங்கி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமசந்திரனுக்கு கொரோனா தொற்று

  அறந்தாங்கி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமசந்திரன் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மருத்துவர்களின் ஆலேசானைப்படி லேசான அறிகுறி என்பதால் வீட்டிலேயே என்னை தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன் என்றும் என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் தன்னை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார். சட்டப்பேரவை கூட்டம் நாளை தொடங்க உள்ள நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

  14:1 (IST)

  சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

  தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் கட்டுப்படுத்தப்பட் தெருக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில்51தெருக்களில் 5க்கும் மேற்பட்டோருக்கு தொற்று மற்றும்  256 தெருக்களில் 3 முதல் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  13:32 (IST)

  பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 415 பேர் மீது வழக்குப்பதிவு

  சிவகங்க்கை மாவட்டம்,சிவகங்கையில் வீரமங்கை வேலுநாச்சியாரின் 292 வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்ற நிலையில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தவந்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 415 பேர் மீது சிவகங்கை நகர் காவல்துறை. நோய் தொற்று காலத்தில் அதிகளவில் கூட்டம் கூட்டியது, அனுமதி இல்லாமல் பொதுக்கூட்டம் நடத்தியது உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் இரண்டு வழக்குப்பதிவு செய்துள்ளது.

  13:11 (IST)

  சிவகாசி பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த களத்தூரில் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஏற்கனவே 4 பேர் உயிரிழந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீக்காய பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முனியாண்டி 34 என்பவர் சிகிச்சை பலனின்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.

  13:10 (IST)

  ராஜேந்திர பாலாஜி விரைவில் கைது செய்யப்படுவார் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையின் பரிசு தொகுப்பு பணமாக வழங்காமல் பொருட்களாக வழங்குவதால் மக்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது என்றும் தெரிவித்தார்.

  11:46 (IST)

  திமுக எம்.எல்எ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று

  பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், எம்.எல்.ஏ-வின் உதவியாளர் மற்றும் ஓட்டுனருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் எம்.எல்.ஏ ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  11:44 (IST)

  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் - அமைச்சர் மூர்த்தி உறுதி

  மதுரையில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த எந்த விதமான கட்டுப்பாடுகள் என்பதை கொரோனா பாதிப்பின் தன்மையை பொறுத்து முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  11:19 (IST)

  குண்டடிப்பட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் : மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு 

  சிறுவன் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து வழக்கில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது சம்பவம் நடந்த நாளன்று தமிழக காவல்துறையினரும் அந்த துப்பாக்கி சுடும் தளத்தில் பயிற்சி மேற்கொண்டதால் தற்பொழுது அவர்களும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.