Latest News Updates ( June 8 ) : பிறப்பு, இறப்பு பதிவு காலதாமத கட்டணத்திலிருந்து விலக்கு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Today News Tamil - Live Updates: கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | June 08, 2021, 14:25 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 13 DAYS AGO

    AUTO-REFRESH

    14:32 (IST)

    பெருந்தொற்றினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில், பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    மேலும் அந்த காலதாமதக் கட்டணத்தை அரசே எற்றுக்கொள்ளும் என்றும் அறிவித்துள்ளார்.

    14:17 (IST)

    பிறப்பு, இறப்பு, பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்தார் தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    13:16 (IST)

    திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

    குடும்ப தகறாரால் தற்கொலை செய்துக்கொண்டார் எனக் கூறப்படுகிறது.இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    13:5 (IST)

    குண்டர் சட்டத்தில் கைது செய்ததை ரத்து செய்ய கோரி மனைவி தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

    நபிகள் குறித்து அவதூறு கருத்து கூறியதாக கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    12:38 (IST)

    மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் பாலியல் புகாருக்கு உள்ளான ஆசிரியர் ஆனந்தன் மீது முன்னாள் மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார்.

    புகாரின் அடிப்படையில் கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் ஆசிரியர் ஆனந்தனை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

    11:53 (IST)

    கோவை மாவட்டம் டாப்சிலிப் கோழிகமுத்தி, நீலகிரி மாவட்டம் முதுமலை ஆகிய இடங்களில் வளர்ப்பு யானைகளுக்கு கொரொனா பரிசோதனை இன்று நடத்தப்பட்டது.

    11:41 (IST)

    நகை கடன் முறையாக செலுத்திய விவசாயிகளுக்கு, நகை கடன்களுக்கான 7 சதவீத வட்டியில் 3 சதவீதம் மானியமாக வழங்க நபார்டு வங்கி சார்பில் அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    10:54 (IST)


    கிண்டியில் செயல்பட்டுவரும் கிங்ஸ் ஆராய்ச்சி மையம் வளாகத்தில் ரூ.250 கோடி மதிப்பில் 12.6 ஏக்கர் பரப்பளவில் பன்னோக்கு மருத்துவமனை அமைய உள்ளதாக ஆய்வுக்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    10:54 (IST)

    தமிழகத்தில் தடுப்பூசி இல்லை என்பது உண்மை எனவும் 13ஆம் தேதிக்குள் 6.5லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரும் எனவும் தெரிவித்தார்.

    10:33 (IST)

    கொரோனா இரண்டாம் அலை காரணமாக மீண்டும் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி முதல் மதுபான கடைகள் மூடப்பட்டன. 42 நாட்களாக மதுபான கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் மதுபான கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபான கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து 42 நாட்களுக்கு பிறகு புதுச்சேரியில் இன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.