Latest Tamil News ( June 15 ) :யூடியூபர் மதன் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

Today News Tamil - Live Updates:கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | June 17, 2021, 16:32 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 6 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    17:20 (IST)

    ஆன்லைன் விளையாட்டில் ஆபாச பேச்சு புகாரில் போலீசாரால் தேடப்படும் மதன் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ஆன்லைனில் சிறுவர், சிறுமிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்வதாக மதன் மீது குற்றச்சாட்டு உள்ளது.

    15:29 (IST)

    மருத்துவர்கள் மீது பல்வேறு இடங்களில் நடைபெறும் தொடர் தாக்குதலை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் நாடு முழுவதும் ஜூன் 18ம்  தேதி கருப்பு பட்டை அணிந்து 'காப்போரை காப்பீர்' என்ற முழக்கத்துடன் 'தேசிய எதிர்ப்பு தினம்' கடைப்பிடித்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளனர்.

    12:37 (IST)

    தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் கன்னியாக்குமரி, திருநெல்வேலி  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.   

    12:6 (IST)

    தமிழக அரசின் இரண்டாம் தவணை கொரோனா சிறப்பு நிவாரணம் 2,000 ரூபாய் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள் தொகுப்புகள் வழங்கும் திட்டத்தை சென்னை சைதாப்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தேர்தல் அறிக்கையில் கூறியபடி 2,09,81,900 அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் 8,392.76 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.

    11:2 (IST)

    வரும் 17 ஆம் தேதி பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின

    டெல்லியில் பிரதமர் மோடியை வரும் 17 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

    10:50 (IST)

     சேலம் பகுதியில் தடுப்பூசி செலுத்தும் மையங்களில் தற்போது தடுப்பூசி இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்த வந்த பொதுமக்கள், ஏமாற்றுத்துடன் திரும்பி செல்கின்றனர்