Latest Tamil News (May 11): சட்டப்பேரவை கூட்டம் , புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு... செய்திகள் உடனுக்குடன்
Today News Tamil - Live Updates: கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.
அரபிக்கடலில் மீன் பிடிப்பவர்கள் வரும் 14ம் தேதி கரைக்கு திரும்ப அறிவுறுத்தல் - வானிலை மையம்
12:50 (IST)
அரபிக்கடலில் வரும் 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு - வானிலை மையம்
12:50 (IST)
மே 14 முதல் தென்தமிழகம்,கேரளா,லட்சத்தீவு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
12:50 (IST)
தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வரும் 14ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் - வானிலை மையம்
12:34 (IST)
சட்டப்பேரவை சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு
12:33 (IST)
கீழ்பாக்கம் மருத்துவமனையில் இறந்தவருடைய மருத்துவரின் பரிந்துரை கடிதத்தை வைத்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்க முயன்ற 3 பேர் போலீசிடம் சிக்கினர். 7ம் தேதி உயிரிழந்த செல்வம் என்பவருக்கு, மருத்துவர் வழங்கிய ஒரே மருந்து சீட்டை ஜெராக்ஸ் எடுத்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
12:16 (IST)
சட்டமன்ற பேரவை தலைவராக போட்டியின்றி அப்பாவு மற்றும் பேரவை துணைத்தலைவராக கு.பிச்சாண்டி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
தமிழக 16ஆவது சட்டப் பேரவையின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் பகல் 12 மணியோடு நிறைவுபெற்றது தலைவர் பதவிக்கு அப்பாவும் துணைத் தலைவர் பதவிக்கு தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
11:57 (IST)
பட தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு நான் பொறுப்பல்ல. லைகா நிறுவனம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் - - இயக்குநர் சங்கர்
Today News Tamil - Live Updates: கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.