Latest Tamil News (June 14) : நீலகிரி மாவட்டத்தில் தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவமழை-கடும் குளிரால் மக்கள் அவதி

Today News Tamil - Live Updates:கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | June 14, 2021, 17:24 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 MONTHS AGO

    AUTO-REFRESH

    16:29 (IST)


    நீலகிரி மாவட்டத்தில்  தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவமழை..

    இன்று காலை முதல் உதகை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

    கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

    15:44 (IST)

    அதிமுக சட்டமன்ற குழு பொருளாளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தேர்வு

    அதிமுக துணை கொறடாவாக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி தேர்வு


    15:34 (IST)

    சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பி.எஸ் தேர்வு 

    சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அதிமுக கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு

    15:34 (IST)

    சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பி.எஸ் தேர்வு 

    சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அதிமுக கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு

    14:39 (IST)


    போலி ட்விட்டர் கணக்கு தொடர்பாக நடிகர் செந்தில் போலீசில் புகார்##
    எனது பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு தொடங்கி அதில் நான் அரசுக்கு எதிராக பேசுவது போல சில விஷமக்காரர்கள் செய்து வருகிறார்கள். 

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுக் கூறி காமெடி நடிகர் செந்தில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    13:20 (IST)

    ஆன்லைன் விளையாட்டின் போது யூடியூப்பில் ஆபாசமாக பேசிய யூடியூபர் மதனின் யூடியூப் சேனல்களை முடக்க சென்னை காவல் துறை யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

    மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் முடக்க நடவடிக்கை என காவல்துறை கூறியுள்ளது.

    12:23 (IST)

    நாளை ரேஷன் கடைகளில் ரூ,2000, மளிகை தொகுப்பு வழங்கப்படும்-உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டி

    கொரோனா நிவாரண நிதி 2வது தவணையாக ரூ.2000 நாளை முதல் வழங்கப்படும்.

    ரேஷன் கடைகளில் நாளை முதல் 14 வகையான மளிகை பொருட்களும் வழங்கப்படும்.

    நாளை முதல் இம்மாத கடைசி வரை ரூ.2000 நிவாரணம், மளிகை பொருட்கள் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

    11:56 (IST)

    11:16 (IST)

    தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம்

    முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ் விஜயன் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக  நியமிக்கப்பட்டுள்ளார்.

    10:54 (IST)


    ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்ததையடுத்து தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் மதுரையில் டாஸ்மாக் கடை வாசலில் மதுபாட்டிலை வைத்து ஒருவர் சூடம் ஏற்றி கும்பிட்டுள்ளார்.