Latest Tamil News (June 13): 24 புதிய மாவட்ட ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு

Today News Tamil - Live Updates: கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | June 13, 2021, 18:39 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    18:38 (IST)

    24 புதிய மாவட்ட ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    1.தேனி ஆட்சியராக முரளிதரன் நியமனம்
    2.புதுக்கோட்டை ஆட்சியராக கவிதா ராமு நியமனம்
    3.சென்னை ஆட்சியராக  ஜெயராணி நியமனம்
    4.காஞ்சிபுரம் ஆட்சியராக ஆர்த்தி நியமனம்
    5.ராமநாதபுரம் ஆட்சியராக கோபால சுந்தர ராஜ் நியமனம்

    18:15 (IST)

    ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்ய தேவைப்படும் அனுமதிகளை தமிழக அரசு ஒருபோதும் வழங்காது -பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம

    டெல்டா மண்டலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான
    ஏல அறிவிப்பினை நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஏலம் விட்டாலும் , தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்ய தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது என்றும், தமிழ்நாட்டின் விவசாயப் பெருங்குடி மக்களின் நலனையும், காவிரிப் படுகை பகுதியின் வளத்தையும் ‘கண்ணை இமை காப்பது போல’ எங்கள் அரசு காக்கும் என்றும் கடிதத்தில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    16:42 (IST)

    யூடியூபர் மதன் மீது சைபர் கிரைம் போலீசில் புகார்-நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கூறி உத்தரவு

    யூடியூபில் மிகவும் பிரபலமான கேம்மரான மதன் மீது புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

    அதன் பேரில் நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கூறி புளியந்தோப்பு துணை ஆணையர் அலுவலக போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

    புகாரின் முகாந்திரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி அந்த யூடியூப் பக்கத்தை முடக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    16:11 (IST)

    20 மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    1. நாகை ஆட்சியராக இருந்த பிரவீன் நாயர் ஊரக வளர்ச்சித்துறை பஞ்சாயத்து ராஜ் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    2. விழுப்புரம் ஆட்சியராக இருந்த அண்ணாதுரை வேளாண்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    3. வேலூர் ஆட்சியராக இருந்த சண்முகசுந்தர் கூட்டுறவு வங்கி பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    4. திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி சுற்றுலா வளர்ச்சித் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    5. திருப்பத்தூர் ஆட்சியராக இருந்த சிவனருள், பதிவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    6. கோவை ஆட்சியராக இருந்த நாகராஜன், நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    7. அரியலூர் ஆட்சியராக இருந்த ரத்னா, சமூகநலத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்

    15:39 (IST)


    20 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்

    20 மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    15:22 (IST)

    நாளை மது வாங்க வருபவர்கள் குடையுடன் வர வேண்டும் -மாவட்ட காவல்துறை அறிவிப்பு

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள 93 கடைகளில் மது வாங்க வரும் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக ஒவ்வொரு வரும் குடை கொண்டு வர வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு மது வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    7:46 (IST)

    'அரசு  சார்பில் வழங்கப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு 

    அரசு  சார்பில் வழங்கப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பை தமிழக உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. 5 லட்சரூபாய் காசோலையும்,,8 கிராம் தங்கபதக்கம் மற்றும் காசோலையும் விருதுடன்  வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கான விண்ணப்பத்தினை வரும் ஜூலை 15க்குள் awards.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

    7:31 (IST)

    தமிழ்நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது. ஓசூரில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

    7:30 (IST)

    பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர

    பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

    7:28 (IST)

    சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 

    சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.97.43-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.64-க்கும் விற்பனை