Latest Tamil News: ரேசன் கடைகளில் ரூ.2000 நிவாரணத்தை 25ம் தேதிக்குள் வழங்க வேண்டும் - தமிழக அரசு

Today News Tamil - Live Updates:கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | June 23, 2021, 19:35 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    17:27 (IST)

    'தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகைக் கொரோனோ' - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்.

    மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடக மாநிலத்தில் உருமாறிய டெல்டா பிளஸ் வகை கொரோனோ கண்டறியப்பட்ட நிலையில் தமிழகத்தில் தற்போது வரை ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகைக் கொரோனோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்.

    17:25 (IST)

    17:25 (IST)

    16:53 (IST)

    ரூ.2000 நிவாரணத்தை 25ம் தேதிக்குள் வழங்க வேண்டும்

    ரேசன் கடைகளில் ரூ.2000 நிவாரணம், மளிகை தொகுப்பை 25ம் தேதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும் என அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை

    16:49 (IST)

    16:48 (IST)

    16:48 (IST)

    காயத்துடன் சுற்றித்திரிந்த பெண் யானை உயிரிழப்பு

    கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உடல்நலக்குறைவால் பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. உடையார்கோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காயத்துடன் 55 வயது மதிக்கத்தக்க பெண் யானை சுற்றித்திரிந்து கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு அண்மையில் தகவல் கிடைத்தது. இதனையடுத்து யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், அதற்கு வாய் மற்றும் முதுகு பகுதிகளில் காயங்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் நேற்று மாலை யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனையடுத்து யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, வனப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

    16:47 (IST)

    கோவையில் இன்று 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் முதலிடத்தில் நீடிப்பதால் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அங்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு தொகுப்பில் இருந்து கோவைக்கு 18 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் 107 மையங்களில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதிகாலை 5 மணி முதலே காத்திருந்த மக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு அந்தந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கோவிஷீல்டு தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், இன்று அந்த தடுப்பூசி செலுத்தப்படவில்லை.

    16:47 (IST)

    எஸ்.பி.ஐ. வங்கி ஏடிஎம்களில் கொள்ளை தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரணை

    இதனிடையே எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் பணம் திருடப்பட்டது தொடர்பாக ஹரியானாவில் தலைமறைவாக இருந்த ஒருவரை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட நபரை டெல்லிக்கு அழைத்து சென்று விசாரிக்க உள்ளதாகவும் கொள்ளையில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருவதாகவும் தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர். ஏடிஎம்களில் பணம் திருடப்பட்டது தொடர்பாக சென்னையில் மட்டும் 16 புகார்கள் வந்துள்ளதாக கூறிய போலீசார், அதில் முறையான ஆவணங்களுடன் 7 புகார்கள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    12:59 (IST)