மதுரையில் முதியோர் இல்லத்தில் வசிக்கும் 21பேருக்கு கொரோனா தொற்று. மதுரை வின்சென்ட் நகர் பகுதியில் செயல்பட்டுவரும் தனியாருக்கு சொந்தமான (அன்னை தெரசா) முதியோர் இல்லத்தில் மொத்தமாக சுமார் 110 பேர் தங்கியுள்ளனர்.இந்தநிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 21 முதியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,இதுவரை முதியவர்களை முகாம்களுக்கு அழைத்து செல்லவோ தனிமைப்படுத்தவும் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் 60வயதை கடந்தவர்கள் என்பதால் தாமதம் இன்றி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.