Latest Tamil News : அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு

Today News Tamil - Live Updates:கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | July 06, 2021, 14:35 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    14:49 (IST)

    யூட்யூப் சேனலை முடக்கி விட்டனர்... வருமானமே போச்சு - மதன் மனைவி கிருத்திகா வேதனை

    சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மதனின் மனைவி கிருத்திகா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், என் கணவர் தடைதடை செய்யப்பட்ட சீனா பப்ஜி விளையாட வில்லை. கொரியன் வெர்ஷ்ன் தான் விளையாண்டார்.3 வருஷமாக என் கணவர் பப்ஜி விளையாண்டு வருகிறார். எங்களிடம் பங்களாவும் இல்லை சொகுசு காரும் இல்லை.ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைக்கிறார். 4 மணி நேரம் மட்டும் தான் தூங்குவார் என தெரிவித்துள்ளார்.மேலும் எங்கள் யூட்யூப் பக்கத்தை முடக்கியுள்ளனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.நான் பப்ஜி கேம் விளையாடவில்லை. எனக்கும் இந்த விஷயத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.காவல் துறை போட்ட வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் எனவும் கூறியுள்ளார்.


    14:46 (IST)

    நாடு முழுவதும் செப்டம்பர் 5-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நடப்பு கல்வியாண்டின் மருத்துவ மாணவர் சேர்க்கைகான நீட் தேர்வுகள் ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற இருந்தன. கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தேர்வு தேதியை முடிவு செய்வது தொடர்பாக தேசிய தேர்வு முகமை பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் செப்டம்பர் 5-ம் தேதி நீட் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 12 தொடங்கி ஆகஸ்ட் 5 வரை மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளை நீட் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    14:44 (IST)

    நடப்பாண்டும் பாடத்திட்டங்களை குறைக்க அரசு பரிசீலனை என தகவல

    நடப்பாண்டும் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை குறைக்க பள்ளிக் கல்வித்துறை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படாததால் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையில் 50 சதவீத பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டன. அதேபோல் 10 முதல் 12ம் வகுப்பு வரை 40 சதவீத பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டன. இந்தநிலையில் கொரோனா 2வது அலை காரணமாக நடப்பு கல்வியாண்டிலும் இதுவரை பள்ளிகள் திறக்கப்படாததால், பாடத்திட்டங்களை குறைக்க வேண்டுமென மாணவர்களும், ஆசிரியர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பான கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பாடத்திட்டங்களை குறைக்க பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வருவதாகவும் அத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


    14:43 (IST)

    சவரனுக்கு ரூ.136 அதிகரித்த ஆபரணத் தங்கம் விலை 

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 35 ஆயிரத்து 784 ரூபாயாக இருந்தது. இன்று வர்த்தகம் தொடங்கியதும் சவரனுக்கு 36 ரூபாய் உயர்ந்து 35 ஆயிரத்து 920 ரூபாயை எட்டியுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 490 ரூபாயாக உள்ளது. அதேசமயம் வெள்ளியின் விலை கிராமிற்கு 10 காசுகளும் கிலோவுக்கு 100 ரூபாயும் குறைந்து 74 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை நடைபெறுகிறது.


    14:41 (IST)

    மூன்றில் இரண்டு பங்காக குறைந்த மேட்டூர் அணை நீர்மட்டம் : அணையில் இருந்து 15,000 கன அடி நீர் திறப்பு

    கடந்த 24 நாட்களில் மேட்டூர் அணையின் நீர் இருப்பு மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது. குறுவை சாகுபடிக்காக இந்தாண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட போது அணையில் 60 புள்ளி ஏழு எட்டு டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. அன்றில் இருந்து ஜூன் 26 வரை விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரும், அதன் பின்னர் 15 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்படுகிறது. ஆனால் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு வெறும் 674 கன அடியாக உள்ளது. இதனால் அணையின் நீர் இருப்பு 40 புள்ளி இரண்டு ஒன்பது டி.எம்.சி.யாக சரிந்துள்ளது.


    14:39 (IST)

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில், தமிழக வீரர்கள் 5 பேர் உள்பட 26 வீரர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக இந்திய தடகள கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    வருகிற 23ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன. இதில் தடகள பிரிவுக்கான போட்டிகள் ஜுலை 31ம் தேதி தொடங்குகின்றன. இந்தநிலையில் இந்திய தடகள கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மொத்தம் 26 வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதில் பெண்கள் நூறு மற்றும் 200 மீட்டர் பிரிவில் டூட்டி சந்த், மிக்சட் 400 மீட்டர் relay-வில் தமிழகத்தைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன் மற்றும் ரேவதி வீரமணி உள்ளிட்ட 9 வீராங்கனைகள் கலந்துகொள்வதாக தெரிவித்துள்ளது. அதேபோல ஆண்கள் தடகள பிரிவில் நட்சத்திர வீரர் குருப்ரீத் சிங், தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் மற்றும் நாகநாதன் பாண்டி உள்பட மொத்தம் 17 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.


    14:37 (IST)

    அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு

    உள் தமிழ் நாட்டில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சேலம், விழுப்புரம், தருமபுரி, கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள அறிவிப்பில், ஜூலை ஆறாம் தேதி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசனாது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜூலை 7-ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 


    14:14 (IST)

    பிக்பாஸ் நடிகை சனம் ஷெட்டிக்கு வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ஆபாசமாக மெசேஷ் அனுப்பிய திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவன் ராய் என்பவரை அடையாறு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை.


    14:4 (IST)

    கர்நாடகாவின் புதிய ஆளுநராக தாவர் சந்த் கெலாட்டை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு

    கர்நாடகா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, கர்நாடக மாநிலத்தின் புதிய ஆளுநராக தாவர் சந்த் கெலாட் நியமிக்கப்பட்டு உள்ளார். ஹரி பாபு கம்பம்பதி மிசோரம் மாநில ஆளுநராகவும், மங்குபாய் சாகன்பாய் படேல் மத்திய பிரதேச ஆளுநராகவும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல், இமாச்சல பிரதேசத்தின் ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டு உள்ளார்.  இதனிடையே, மிசோரம் மாநில ஆளுநராக இருந்த பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை கோவாவின் ஆளுநராகவும்,

    ஹரியானாவின் ஆளுநராக இருந்த சத்யதேவ் நாராயண் ஆர்யா திரிபுரா ஆளுநராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.அதேபோல், திரிபுரா ஆளுநராக செயல்பட்டு வந்த ரமேஷ் பைசை ஜார்கண்டிற்கு மாற்றியும், இமாச்சல பிரதேசத்தின் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவை ஹரியானாவின் ஆளுநராக நியமித்தும் குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.


    14:2 (IST)

    யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் இத்தாலி ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன..

    இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள விம்ப்லி மைதானத்தில் முதல் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில், இத்தாலி ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டி, இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது. சர்வதேச தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இத்தாலி, நாக்-அவுட்டில் ஆஸ்திரியாவையும், காலிறுதியில் நம்பர் ஒன் அணியான பெல்ஜியத்தையும் வீழ்த்தியது.

    இத்தாலி அணியின் வெற்றியில் இன்சினே, லொகாட்டலி, பெஸினா ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். அதேவேளையில் ஸ்பெயின் அணி, நாக்-அவுட்டில் குரோஷியாவுக்கு எதிராக, கூடுதல் நேரத்தில் வெற்றி வசமானது. மேலும், காலிறுதியில் ஷூட்-அவுட் முறையில் சுவிட்சர்லாந்து அணியை போராடி வீழ்த்தியது. அரையிறுதியில் சமபலம் வாய்ந்த இத்தாலி ஸ்பெயின் நேருக்கு நேர் மோதவுள்ளதால். இப்போட்டி மீது பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.