Latest Tamil News (May 21): கொரோனா அப்டேட் , தமிழ்நாடு முதல் உலகம் வரை செய்திகள் உடனுக்குடன்
Today News Tamil - Live Updates: கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.
ஒரே கல்வியாண்டியில் இரண்டு பட்டங்கள் பெறுவதை மத்திய அரசு அனுமதிக்காத வரை, அவற்றை அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களாக கருதமுடியாது - சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பு
14:47 (IST)
முக கவசத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
12ம் வகுப்பு பயிலும் 30சதவிகித அரசு பள்ளி மாணவர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லை - மாவட்டங்களிலிருந்து பள்ளிக்கல்வித்துறை பெற்ற தரவுகளில் தகவல்
12:36 (IST)
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை எதிரே விதிமுறைகளை மீறி செயல்பட்ட உணவகங்களுக்கு சீல் வைப்பு.
12:19 (IST)
சிறப்புச் சலுகை அடிப்படையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை மட்டும் விடுதலை செய்வது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது - சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் காரைக்குடியில் பேட்டி
12:17 (IST)
கொரோனா தொற்று பரவல் காரணமாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறவிருந்த 124 - வது மலர் கண்காட்சி ரத்து செய்யபட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் க. ராமசந்திரன் அறிவிப்பு. பொது மக்கள் இணையதலத்தில் மலர் கண்காட்சியை காணும் இணையதலத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்.