Latest Tamil News (May 24): கொரோனா அப்டேட் , தமிழ்நாடு முதல் உலகம் வரை செய்திகள் உடனுக்குடன்
Today News Tamil - Live Updates: கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.
சென்னையைச் சேர்ந்த மற்றொரு பள்ளி மாணவியின் பாலியல் புகார்
17:18 (IST)
சென்னையை சேர்ந்த மற்றொரு பள்ளி மாணவியும் பாலியல் புகார்.சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் படித்ததாக மாணவி தகவல்.வணிகவியல் ஆசிரியர் ஆனந்த் என்பவர் தவறாக நடந்து கொண்டதாக ட்விட்டரில் தகவல்
17:14 (IST)
பாலியல் புகாருக்கு உள்ளான ஆசிரியர் ராஜகோபாலன், அவரது மனைவி, அவரது தாய் ஆகிய மூன்றுபேரை விசாரணைக்கு அழைத்து சென்ற தனிப்படையினர் அவர் பயன்படுத்திய லேப்டாப், செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.
17:13 (IST)
பத்ம சேஷாத்ரி பள்ளியை நான் நடத்தவில்லை.. என் மகளுக்கும் பள்ளிக்கும் எந்த தொடர்பும் இல்லை - ஒய்.ஜி.மகேந்திரன்
17:12 (IST)
மதுரையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் 30 கிலோமீட்டர் தூரம் சரக்கு ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்ட கொரோனோ நோயாளி சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் உயிரிழந்தார்.
17:10 (IST)
தற்பொழுது கோவிட் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது - மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி