Latest TamilNews (June 16): மதனின் யூடியூப் சேனலை முடக்க யூடியூப் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம்

Today News Tamil - Live Updates:கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | June 16, 2021, 18:12 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 MONTHS AGO

    AUTO-REFRESH

    21:10 (IST)


    இரண்டாவது அலையில் கர்ப்பிணி பெண்கள் மரணம் 0.7% லிருந்து 5.7% ஆக உயர்ந்துள்ளது. எனவே கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்த ஐ.சி.எம்.ஆர் பரிந்துரை.

    19:47 (IST)

    கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் இன்று கொரோனா தொற்றால் 10,448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.270 பேர் உயிரிழந்துள்ளனர்.


    18:10 (IST)

    மதனின் யூடியூப் சேனலை முடக்க யூடியூப் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

    ஏற்கனவே ஆபாசமாக பேசிய  வீடியோக்கள் நீக்கபட்ட நிலையில், சேனலை நிரந்தரமாக முடக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது.

    மதனுடன் இணைந்து, அவருடைய மனைவி கீர்த்திகாவும் ஆபாசமாக பேசி வீடியோ பதவிட்டுள்ளதால் , மனைவி கீர்த்திகாவை கைது செய்திருப்பதாக போலீசார் தகவல்.

    17:42 (IST)

    9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் 9ம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு நடைபெறாத நிலையில் எவ்வாறு 9ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிட வேண்டும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது..

    2019 மற்றும் 2020 ஆம் கல்வி ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அப்போது நடைபெற்ற காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் எதில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார் அதை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.
    காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இரண்டிலும்  தேர்ச்சி பெறாத பாடத்தில் அந்த பாடத்திற்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் 35 வழங்கலாம்.

    எனவே ஒன்பதாம் வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    15:11 (IST)

    சிமெண்ட் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி 


    14:9 (IST)

    அதிமுகவில் இரட்டை தலைமையே நீடிக்கிறது - முன்னாள் அமைச்சர் காமராஜ் 


    14:4 (IST)

    தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு : நீலகிரி, கோவை, தேனியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு

    13:57 (IST)

    சசிகலா ஆடியோ விவகாரம் தொடர்பாக கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தெளிவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

    13:56 (IST)


    சசிகலாக்கு எதிராக அதிமுக மாவட்ட கழகங்களில் நாளை தீர்மானம் - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

    13:56 (IST)

    பள்ளிக்கல்வி துறை இயக்குனரின் அதிகாரங்களை, ஆணையரிடம் ஒப்படைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து வழக்கு.மனுதாரரான ஓய்வுபெற்ற ஆசிரியர் கருணாகரன் தரப்பில் அவகாசம் கேட்டதால் வழக்கின் விசாரணை அடுத்த வாரம் தள்ளிவைப்பு - சென்னை உயர் நீதிமன்றம்