Latest TamilNews : ஊரடங்கு நீட்டிப்பு: மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் துவங்கியது

Today News Tamil - Live Updates:கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | June 19, 2021, 11:18 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    18:39 (IST)

    சென்னையில் மழை 

    சேப்பாக்கம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை

    11:47 (IST)


    இந்தியா சிமெண்ட் நிறுவனர் சீனிவாசனை கண்டித்து கட்டுமானம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி காண்பித்து அவருடைய இல்லம் முன்பு போராட்டம்

    11:46 (IST)

    சிவசங்கர் பாபா குறித்து புகார் அளிப்பதற்காக அறிவித்த சிபிசிஐடி செல்போன் எண்ணிற்கு 25 புகார்கள் வந்துள்ளது. அதில் வந்துள்ள தகவல்களை விசாரித்து  வருகிறோம் - சிபிசிஐடி போலீசார்

    11:41 (IST)

    கல்வி தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் அடங்கிய விடியோ தொகுப்பை தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின

    சென்னை: கல்வி தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் அடங்கிய விடியோ தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.ஒன்றாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான புதிய பாடங்களுக்கான வகுப்புகள் கல்வி தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டுள்ளது.2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடநூல்களை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அமைச்சர் எ.வ.வேலு, உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்

    11:40 (IST)

    எடியூரப்பா உருவ பொம்மை எரிப்பு

    கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கண்டித்து திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    11:40 (IST)

    அரியலூர்  மாவட்டத்தில் உள்ள 123 கோயில் பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.

    11:40 (IST)

    புதுச்சேரியில் இன்று புதிதாக 295 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..6 பேர் சிகிச்சை பலனின்றி பலி.

    11:28 (IST)

    புதிய 10 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின

    சென்னை: புதிதாக 10 ஆம்புலன்ஸ்களின் சேவையை முதல்வர் ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் தொடங்கிவைத்துள்ளார். 10 ஆம்புலன்ஸ்களில் 8 வாகனம் மலைப்பகுதிகளிலும், 2 வாகனம் மற்ற இடங்களிலும் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

    11:16 (IST)

    கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு: மு.க.ஸ்டாலின் தலைமையில்  ஆலோசனை கூட்டம் துவங்கியது

    கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துவங்கியது.கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக காவல்துறை தலைவர் திரிபாதி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்பு.ஊரடங்கு வருகின்ற 21ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் ஊரடங்கு மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. பொதுப் போக்குவரத்து ஜவுளி மற்றும் நகைக் கடைகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

    11:7 (IST)

    முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல்