Latest Tamil News: அண்மைச்செய்திகள் உடனுக்குடன் லைவ் அப்டேட்ஸ்

தமிழ்நாடு மற்றும் தேசிய, உலக நடப்புகளை உடனுக்குடன் நிகழ்நேரத்தில் அறிந்திட இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்..

  • News18 Tamil
  • | October 12, 2020, 15:23 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A YEAR AGO

    AUTO-REFRESH

    14:46 (IST)
    தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், நடிகர் தனுஷ் ஆகியோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
    10:33 (IST)

    முதல்வர்  எடப்பாடி பழனிசாமி  தாயார் தவுசாயம்மாள் உடல்நலகுறைவால் சேலத்தில் காலமானதையொட்டி, பா.ம.க நிறுவனத் தலைவர் ராமதாஸ், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர்  வை.கோ., நடிகர் ரஜினிகாந்த், ஆகியோர் முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினர்.

    10:12 (IST)

    திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமியை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, அவரது தாயார் மறைவிற்குத் தமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

    10:8 (IST)
    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவரை காலில் விழ வைத்ததாக 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    9:39 (IST)
    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் தவசாயி அம்மாள் உடல்நலக் குறைவால் சேலத்தில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தவசாயி அம்மாள் அவர்களை இழந்து வாடும் அவரது புதல்வர் முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். - பாமக நிறுவனர் ராமதாஸ்
    9:25 (IST)

    முதலமைச்சரின் தாயார் மறைவிற்கு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இரங்கல் . 

    முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பேசினார்

    அப்பொழுது முதலமைச்சர் தாயார் மறைவிற்கு இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

    இன்று மதியம் சாலை வழியாக துணை முதலமைச்சர் சேலத்தில் உள்ள முதலமைச்சரின் இல்லத்திற்கு செல்ல உள்ளார்.

    9:16 (IST)

    ஐபிஎல் தொடரின் 29ஆவது லீக் ஆட்டம் துபாய் சர்வதேச மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் கட்டாயம் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கும் சென்னை அணி ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது.

    15:47 (IST)
    மத்திய அரசின் அறிவுறுத்தல்படி தமிழ்நாட்டில் சீர்மரபினர் கணக்கெடுப்பை நடத்துவதால் அவர்களுக்கும், வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்குமான இட ஒதுக்கீடு கடுமையாக பாதிக்கப்படும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதைத் தடுக்க தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும், வன்னியர்கள், பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்கு தனித்தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி முதலமைச்சர் பழனிசாமிக்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
    15:25 (IST)
    கண்டென்மெண்ட் பகுதிகளில் இருந்து தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் 14 ஆம் தேதி மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுள்ளதாக இன்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். அப்போது நீட் தேர்வு முடிவுகள் அக்டோபர் 16 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
    14:22 (IST)

    குஷ்பு போன்றவர்கள் வருகையால் பலன் என்ற நோக்கத்தில் அவரை கட்சியில் சேர்க்கவில்லை எனவும் தனி மனிதர்களால்  பலன் பெறும்  நிலையில் பா.ஜ.க இல்லை என அக்கட்சியின் மாநில பொருளாளர்  எஸ்.ஆர்.சேகர் தெரிவித்தார்.