Latest Tamil News : கோவில் சொத்துக்களுக்கும், சிலைகளுக்கும் நீதிமன்றமே பாதுகாப்பு - சென்னை உயர் நீதிமன்றம்

Today News Tamil - Live Updates:கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

 • News18 Tamil
 • | June 28, 2021, 20:44 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED A MONTH AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  20:43 (IST)

  கோவில்  சொத்துக்களுக்கும், சிலைகளுக்கும் நீதிமன்றமே பாதுகாப்பு - சென்னை உயர் நீதிமன்றம்

  பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு இங்கிலாந்து ராணியால் தானமாக வழங்கப்பட்ட நிலத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க குத்தகைதாரர்களுக்கு நீதிபதி டீக்காராமன் உத்தரவு

  1863ல் தாராபுரம் பெரியகுமாரபாளையத்தில் தானமாக கொடுக்கப்பட்ட 60 ஏக்கர் நிலத்தை ஸ்ரீரங்க கவுண்டர், ராமசாமி கவுண்டர் ஆகியோர் குத்தகைக்கு எடுத்திருந்த நிலையில், சுவாதீன உரிமை கோரிய மனுக்கள் தள்ளுபடி

  பழனி கர்ப்பகிரகத்தில் உள்ள சாமியை பகதர்கள் குழந்தையாகவே பார்க்கின்றனர். அதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்கின்றனர் - நீதிபதி

  குழந்தைகளை பாதுகாப்பது நீதிமன்றங்களின் கடமை என்பதால், சாமியின் சொத்தையும் நீதிமன்றம் பாதுகாக்கும் - நீதிபதி

  19:22 (IST)

  19:9 (IST)

  18:21 (IST)

  புனேவிலிருந்து சென்னை வந்தடைந்த 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்..


  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வந்தது.

  இந்த நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் தடுப்பூசிகள் தட்டுப்பாடுகள் ஏற்பட்டது. உடனடியாக தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது.

  தமிழக மக்கள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசு நேரடியாக தடுப்பூசிகளை  கொள்முதல் செய்தும் வருகிறது.இந்நிலையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான மூலம் 17 பார்சல்களில் 2 லட்சம் டோஸ் கோவீஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

  தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து  குளிர்சாதன வாகனம் மூலம் 2 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகளை சென்னை DMS வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்க்கு கொண்டு சென்றனர்.தடுப்பூசி மருந்துகளை தட்டுப்பாடு உள்ள இடத்திற்கு அனுப்பி வைக்க உள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  17:15 (IST)

  பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிர்வாகி சிவசங்கர் பாபாவை  செங்கல்பட்டு போஸ்கோ நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்திய நிலையில் சிவசங்கர் பாபாவிற்கு  போஸ்கோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி 3 நாட்கள் சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்

  16:18 (IST)

  மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும், தஞ்சை மாவட்டத்தில் உள்ள கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி நீர் சென்றடையவில்லை. இதனால், குறுவை சாகுபடி பணிகளை தொடங்கிய விவசாயிகள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

  15:58 (IST)

  மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்த கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் பேட்டி 

  மதுரை விமான நிலைய ஓடுபாதை விரிவாக்க பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளன. சுமார் 600 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும் பணிகளில் தொய்வு இருந்து வந்தது. அதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளோம்.

  இன்னும் இரண்டு வாரத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிக்கப்படும்.

  ஓடுபாதை நீட்டிப்பு பணிகள் முடிந்த பிறகு பெயரளவில் சர்வதேச விமான நிலையமாக இருக்கும் மதுரை விமான நிலையத்தை முழுமையாக சர்வதேச விமான நிலையமாக மாற்ற முடியும் என்ற நோக்கில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.

  திருச்சி, கோவையை போல மதுரை விமான நிலையமும் சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.


  15:12 (IST)

   ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படுகிறது டி20 உலகக்கோப்பை 

  15:2 (IST)

  வரும் 5ம் தேதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தேமுதிக கண்டனம் ஆர்ப்பாட்டம்


  15:1 (IST)

  இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு 

  இதுக்குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், அனைத்து கோவில் அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்,முதுநிலை கோயிலின் நுழைவு நிலை பதவிகளுக்கான தகுதியான நபர்கள், முதுநிலை அல்லாத கோயில்களில் இல்லாத நேர்வுகளில் அத்தகைய பணியிடங்கள் பிற நியமன முறைப்படி அதாவது வெளியில் இருந்து நபர்களை கொண்டு நிரப்பப்படலாம் என்றும், காலி பணியிடங்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி, ஊதியம் மற்றும் இதர விவரங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோரும் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.