Tamil News Live | இன்றைய டாப்10 செய்திகள், ஜனவரி 28

Breaking News | Tamil Live Updates | Tamil Top News Today | உள்ளூர் முதல் உலகநடப்புகள் வரை அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

  • News18 Tamil
  • | January 28, 2022, 18:07 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 4 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    18:8 (IST)

    இன்றைய டாப்10 செய்திகள்

    1) இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப் பழக்கத்துக்கு எதிராக போராட வேண்டும். என்சிசி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்


    2) மின்சார கட்டணத்தை நுகர்வோரே கணக்கிடும் வகையில் மொபைல் செயலி அறிமுகம். ஒன்றாம் தேதி முதல் சோதனை முறையில் செயல்படுத்த ஊழியர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவு.

    3) மக்கள்நலன் சார்ந்ததாக அரசின் கொள்கை முடிவு இருக்க வேண்டும். மதுவிலக்கு விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

    4) மாணவி தற்கொலை விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் மனு.ஒருதரப்பினருக்கு ஆதரவாக பேசுமாறு நிர்பந்தம் செய்வதாக குற்றச்சாட்டு....


    5) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்.மாலை 5 மணிவரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு.


    6) உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக- காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சு. அதிமுக-வுடனான தொகுதிப் பங்கீடு குறித்து பாஜக நிர்வாகிகள் ஆலோசனை.


    7) கல்லூரி பருவத் தேர்வுகள் ஆன்லைனிலேயே நடைபெறும் என அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. தேர்வு இல்லாத நாட்களில் மாணவர்கள், கல்லூரிக்கு வர அறிவுரை.

    8) அடுத்த மாதம் 19-ம் தேதி நடைபெறவுள்ள பொறியியல் தேர்வுகள் மார்ச் மாதத்துக்கு ஒத்திவைப்பு. உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக அண்ணா பல்கலைக் கழகம் நடவடிக்கை.

    9) நடிகர் விஜயின் சொகுசு கார் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டாம். 400 சதவிகித அபராதத்தை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு.


    10) மதத்தின் அடிப்படையில் வெறுப்பை உருவாக்கும் வகையில் செயல்பட்டதாக பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் மீது வழக்குப்பதிவு. பொது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டால் சட்ட நடவடிக்கை என சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை.

    16:9 (IST)

    கர்நாடகா முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடலலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    16:3 (IST)

    கிண்டி ரயில் நிலையம் அருகே உள்ள சங்கீதா உணவகத்தில் பாத்ரூமில் செல்போனை வைத்து வீடியோ பதிவு செய்ததாக திமுக பிரமுகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

    16:2 (IST)

    பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையின் முன்னாள் ஐஜி-க்கு எதிராக சிபிசிஜடி விசாரணை தெடங்கிவிட்டது. ஐஜி முருகன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதே துறையில் பணியாற்றிய பெண் எஸ்பி கடந்த 2018ம் ஆண்டில் புகார் அளித்தார்.

    16:0 (IST)

    2022ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயணம் நிச்சயம் நடைபெறும் இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர் தெரிவித்து்ளார். தமிழக முதல்வர் மத்திய அரசிற்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில்  2022 ஜூன் மாதம் இறுதியில் இருந்து ஹஜ் செல்லும் விமானங்கள் சென்னையில் இருந்து புறப்படும். அதற்கான ஆயுத்த பணிகளும் நடைபெற்று வருகிறது. 

    15:59 (IST)

    "விடுதலைப் போரில் தமிழகம்" என்ற தலைப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில் குடியரசு தின ஊர்வலத்தில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில் ஒன்று மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்தது. 

    15:59 (IST)

    தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் முதற்கட்ட 50 வார்டுகளின் பட்டியலை கட்சியின் மாநில செயலாளரும், சென்னை மண்டல தலைவருமான ஏ.கே.கரீம் தெரிவித்துள்ளார்.

    13:18 (IST)

    அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக பேச சொல்லி, சிலர் ஊருக்குள் வந்து நிர்ப்பந்தம் செய்வதாக மைக்கேல் பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

    13:16 (IST)

    நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து இன்று மாலை அதிமுக - பாஜக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது. தா.மா.க தலைவர் ஜி.கே.வாசன் இன்று மாலை அதிமுக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்

    10:32 (IST)

    சென்னை கமலாலயத்தில் பாஜக மாவட்ட தலைவர்களுடன் மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனைநடத்துகிறார். இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் இதுவரை இடப்பங்கீடு பேச்சுவார்த்தையை பாஜக தொடங்காத நிலையில், எந்த மாவட்டத்தில் எத்தனை இடங்கள் கேட்கலாம்? என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படுகிறது.