Tamil News Live | இன்றைய டாப்10 செய்திகள், ஜனவரி 26

Breaking News | Tamil Live Updates | Tamil Top News Today | உள்ளூர் முதல் உலகநடப்புகள் வரை அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

 • News18 Tamil
 • | January 26, 2022, 18:24 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 4 MONTHS AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  18:22 (IST)

  இன்றைய டாப் 10 செய்திகள்

  1) டெல்லி ராஜப்பாதையில் குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம். முப்படை அணிவகுப்பு மரியாதை ஏற்றார் குடியரசு தலைவர். 

  2) சென்னையில் மூவர்ண கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. முப்படையினர் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு. 

  3) தேசிய அளவில் சமூக நீதிக்கான கூட்டமைப்பை தொடங்குவோம். சமூக நீதி குறித்த கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

  4) கொரோனா குறைந்தால் 10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுது்த வாரம் பள்ளிகளை திறக்க பரிந்துரைப்போம். அமைச்சர் அன்பில் மகேஷ் 

  5) காஞ்சிபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட 13 இடங்களில் ரூ.424 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள்.

  6) தஞ்சாவூரில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியை மதம் மாற்ற முயற்சிக்கவில்லை. பள்ளி நிர்வாகம் விளக்கம்.

  7) தற்கொலை செய்து தஞ்சாவூர் மாணவி 2020-ம் ஆண்டில் புகார் அளித்ததாக தகவல். அரியலூர், தஞ்சை எஸ்.பிகளிடம் விசாரணை அறிக்கையை அளிக்க Child Help Line.

  8) நயினார் நகேந்திரன் சர்ச்சை பேச்சு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்ததாக அண்ணாமலை பேட்டி. வாய் தவறி பேசி விட்டதாகவும் விளக்கம். 

  9) பீகாரில் ரயில்வே தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மேலும் ஒரு ரயிலுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்.


  10) உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிக்ப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

  15:29 (IST)

  நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் பிரசாரத்தில் தனிப்பட்ட வாழ்கை தொடர்பான விமர்சனத்தை தவிர்க்க வேண்டும். மாநில அமைச்சர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பயணம் செய்ய தடை. தலைவர்கள் சிலையை மறைக்க தேவையில்லை. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று அறிவித்துள்ளனர்.

  13:39 (IST)

  இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

  12:39 (IST)

  நடிரக் சீரஞ்சிவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். லேசான அறிகுறி என்பதால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

  12:31 (IST)

  , 10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் திறப்பதற்கு முதல்வரிடம் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படாது என்றும் தெரிவித்தார்.

  10:37 (IST)

  73-வது குடியரசு தின விழா : டெல்லியில் தேசிய கொடியேற்றினார் குடியரசு தலைவர்

  9:24 (IST)

  இரு மாநிலங்களில் கொடியேற்றிய ஆளுநர்


  தெலுங்கானாவின் ஆளுநராக அங்கு காலை 7.30 மணிக்கு தமிழிசை சௌந்தரராஜன் தேசிய கொடியேற்றினார்.தொடர்ந்து தனிவிமானம் மூலம் புதுச்சேரி வந்த அவர்,புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் என்ற முறையில் இரண்டாவதாக தேசிய கொடியை ஏற்றினார்.

  9:23 (IST)

  குடியரசு தினவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதலமைச்சர் 8 பேருக்கு வழங்கினார். 

  9:22 (IST)

  தமிழகத்திலேயே சிறந்த காவல் நிலையமாக முதலிடம் பிடித்த திருப்பூர் மாநகரத்தை சேர்ந்த திருப்பூர் தெற்கு நகர காவல் நிலை ஆய்வாளர் பி. பிச்சையா அவர்களிடம் தமிழக முதல்வர் முதல் பரிசுக்கான கோப்பையை வழங்கினார்

  9:21 (IST)

  73-வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியேற்றி அணிவகுப்பு மரியாதை ஏற்றார்.