இன்றைய டாப்10 செய்திகள்
1) 7.5 சதவீத ஒதுக்கீட்டால் மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பு என ஆளுநர் ரவி உரை. தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தல்.
2) தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்.
3) தமிழக மீனவர்கள் 55 பேரை விடுவிக்க இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு. ஓரிரு நாட்களில் நாடு திரும்புவார்கள் என தகவல்.
4) தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை. தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்.
5) பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலத்தில் வீட்டினுள் பாய்ந்த துப்பாக்கி குண்டு. துப்பாக்கி சுடும் மையத்தில் இருந்து வந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி.
6) பிளஸ் 2 மாணவி தற்கொலையை பாஜக மத அரசியலாக மாற்றுவது வருத்தமளிப்பதாக கனிமொழி விமர்சனம். சிபிஐ விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளியாகும் என அண்ணாமலை பேட்டி.
7) உயிரிழந்த அரியலூர் மாணவி குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு.
8) உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்பிஎன் சிங், பாஜக-வில் ஐக்கியம்.சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பரபரப்பு.
9) குடியரசு தின விழாவில் பங்கேற்க பொதுமக்கள், மாணவ, மாணவிகள் நேரில் வர வேண்டாம். கொரோனா அச்சத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு அறிவுறுத்தல்.
10) அவிநாசி அருகே பாப்பாங்குளத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை பக்கத்து ஊருக்கு இடம்பெயர்ந்தது. பஞ்சலிங்கம் பாளையத்தில் உள்ள தோட்டத்தில் நடமாடுவதாக தகவல்.