Tamil News Live | இன்றைய டாப்10 செய்திகள், ஜனவரி 24

Breaking News | Tamil Live Updates | Tamil Top News Today | உள்ளூர் முதல் உலகநடப்புகள் வரை அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

 • News18 Tamil
 • | January 24, 2022, 18:33 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 4 MONTHS AGO

  AUTO-REFRESH

  18:32 (IST)

  இன்றைய டாப்10 செய்திகள்

  1) தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டப்பணிகளை விரைவுப்படுத்த தமிழக அரசு ஒத்துழைப்போம். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விமர்சனம் செய்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

  2) அரியலூர் மாணவி கடைசி பேச்சை வீடியோ எடுத்தவர் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும்.  உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

  3) அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி.

  4) குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து. கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் நடைபெறாது என்று தமிழக அரசு அறிவிப்பு.

  5) நகர்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்க தொடரப்பட்ட வழக்கு. தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் கைககள் கட்டப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் கருத்து.

  6) சென்னை அருகே திருப்போரூரில் அமைகிறது பிரம்மாண்ட விளையாட்டு நகரம். சர்வதேச தரத்தில் அமைக்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு

  7) ஒமைக்ரான் திரபு கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி என்று கருதுவது ஆபத்தானது. உலக சுகாதார மையம் எச்சரிக்கை

  8) தமிழகத்தில் 95 லட்சம் பேருக்கு 2-வது டோஸ் செலுத்தி கொள்ளவில்லை. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்

  9) பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள பொறியியல் செமஸ்டர் தேர்வை புத்தகத்தை பார்த்து எழுதலாம். அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விளக்கம்.

  10) தமிழகத்தின் கடலோர மாவட்ங்களில் மழைக்கு வாய்ப்பு. அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல்.

  16:8 (IST)

  கடலூர் ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி


  கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியத்திற்கு கடந்த 2 நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால் நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். 

  16:6 (IST)

  தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் தலைமை அமைப்பான அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் மாணவர்கள் புத்தகங்களை பார்த்து செமஸ்டர் தேர்வு எழுதலாம் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் பல்கலைக்கழக மானியக் குழு ஆகியவை மாணவர்களின் திறனை சோதிப்பதற்காக நடத்தப்படும் தேர்வுகளில் மாணவர்கள் புத்தகங்களை பார்த்து எழுதுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  16:6 (IST)

  தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் தலைமை அமைப்பான அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் மாணவர்கள் புத்தகங்களை பார்த்து செமஸ்டர் தேர்வு எழுதலாம் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் பல்கலைக்கழக மானியக் குழு ஆகியவை மாணவர்களின் திறனை சோதிப்பதற்காக நடத்தப்படும் தேர்வுகளில் மாணவர்கள் புத்தகங்களை பார்த்து எழுதுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  15:28 (IST)

  எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் ஜாமீன் மனு தள்ளுபடி

  அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 17 லட்சம் மோசடி செய்ததாக கைதானமுன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளர் மணியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  தன் மீதான புகார் பொய் என மணி மனுவில் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் மனுதாரர் மோசடி  செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்று  காவல்துறை தெரிவித்துள்ளது.

  11:48 (IST)

  குறும்பட இயக்குனர் திடீர் மரணம்

  வியாசர்பாடி ரத்தினம் தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார்(22) என்ற தனியார் கல்லூரியில் விஸ்.காம் மாணவர் குறும்படங்களை இயக்கி வந்துள்ளார். இவர் நேற்று இரவு மது குடித்துவிட்டு பிரியாணி சாப்பிட்டு விட்டு வந்து படுத்தவர் உடல்நிலை சரியில்லாமல் ஸ்டான்லி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  ரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனை செய்தபிறகே அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தகவல்.

  11:32 (IST)

  அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் காரணம் யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவிதுள்ளளார். தற்கொலைக்கு முயன்ற மாணவியிடம் மத ரீதியான அமைப்புகள் வீடியோ எடுத்தது தவறு. மதமாற்றம் சர்ச்சை எழுந்துள்ளதால் பள்ளியில் பயிலுகின்ற மாணவர்கள் ஏற்கனவே பயின்ற மாணவர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது.

  9:25 (IST)

  இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு

  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,06,064 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரேனாவிலிருந்து  2,43,495 பேர் குணமடைந்துள்ள நிலையில்  439 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது.

  9:24 (IST)

  தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்குப் பிறகு வழிபாட்டுத் தலங்களில் இன்று அனுமதி. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் தரிசனம் செய்யும் பக்தர்கள். முக்கிய வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

  9:24 (IST)

  ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக தமிழகத்தைச் சேர்ந்த 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனனர். நாற்பத்தி ஐந்து செம்மரக் கட்டைகள் மற்றும் 75 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.