இன்றைய டாப் செய்திகள், ஜனவரி 21
1) தமிழ்தாய் வாழ்த்து பாடலை முன்னாள் முதல்வர் கருணாநதி திருத்தியது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
2) தமிழகத்தில் மூன்றாவது வாரமாக வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.
3) இந்தியா கேட் பகுதியில் இருந்து அமர்ஜவான் ஜோதி இடமாற்றம். ராணுவ மரியாதையுடன் பேர் நினைவு இல்லத்தில் உள்ள ஜோதியுடன் ஐக்கியம்.
4) பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு. தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கவும் அறிவுரை.
5) பாகிஸ்தானில் இருந்து தவறான வீடியோ வெளியிட்ட 35 யூடியூப் சேனல்களை முடக்க உத்தரவு.
6) குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு. வரும் திங்கட் கிழமையன்று விசாரணை.
7) கோவை, திருச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு.போட்டிகள்
8) உத்திரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார்? ப்ரியங்கா காந்தி சூசக பதில்
9) தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 287 ரன்கள் குவிப்பு.
10) ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 தொடரின் முழு அட்டவணை வெளியானது இந்தியா முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.