இன்றைய டாப்10 செய்திகள்
1) தமிழகத்தின் கொரோனா பரவல் கவலை தரும் விதத்தில் உள்ளது. தொற்று அதிகரிக்கும் முதல் 5 மாநிலங்களில் இடம்பெற்றுள்ளதாக மத்திய அரசு தகவல்.
2) தஞ்சாவூரில் மதம் மாற வற்புறுத்தியதால் பள்ளி மாணவி தற்கொலை செய்ததாக கூறப்படும் விவகாரம். உண்மை குற்றவாளியை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் சாலை மறியல். சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர் உட்பட பலர் கைது.
3) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 328 ரூபாய் அதிகரிப்பு. ஒரு சவரன் 36700 ரூபாயாக உயர்ந்தது
4) பொங்கல் பரிசுத்தொகுப்பில் குறைபாடு எனப் புகார்.அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
5) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள். கோவையில் திமுக சார்பில் போட்டியிட விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல். 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மக்கள் நீதி மய்யத் தலைவர்.
6) அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் வீடு, அலுவலகங்கம் உட்பட 57 இடங்களில் 10 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை. வருமானத்திற்கு அதிகமாக 11 கோடியே 32 லட்சம் ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக வழக்கு.
7) தவறான வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டே இருந்தால் யூடியூப்பை ஏன் தடை செய்யக் கூடாது என உயர்நீதிமன்றக் கிளை கேள்வி. யூடியூப் பார்த்து துப்பாக்கி, வெடிகுண்டு தயாரிப்பதை எவ்வாறு தடுக்கப் போகிறோம் என்றும் நீதிபதி வினா
8) கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவுக்கான, தொகை வழங்கப்படவில்லை எனப்புகார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மருத்துவமனை முன்பு ஓட்டல் நிர்வாகிகள் போராட்டம்
9) விழுப்புரம் மாவட்டம் வளவனூர் காவல்நிலையத்தில் 15 போலீசாருக்கு கொரோனா தொற்று. கடந்த 4 நாட்களாக, காவல்நிலையம் வந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தல்
10) இந்திய பகுதிக்குள் நுழைந்து 17 வயது சிறுவனை கடத்தியதாக சீன ராணுவம் மீது புகார். ஹாட் லைன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியது இந்திய தரப்பு